அல்ட்ராவொய்லெட் 'எக்ஸ் 47' இ.வி., 'ரேடார்' வசதி உள்ள உலகின் முதல் பைக்
அல்ட்ராவொய்லெட் 'எக்ஸ் 47' இ.வி., 'ரேடார்' வசதி உள்ள உலகின் முதல் பைக்
UPDATED : அக் 01, 2025 08:31 AM
ADDED : அக் 01, 2025 08:30 AM

'அல்ட்ராவொய்லெட்' நிறுவனம், 'எக்ஸ் 47 கிராசோவர்' என்ற அட்வெஞ்சர் டூரர் மின்சார பைக்கை அறிமுகம் செய்து உள்ளது. இது, 'ரேடார்' வசதி கொண்ட உலகின் முதல் பைக்காகும்.
ஓட்டுநரின் பாதுகாப்பு கருதி, 'ரேடார்' வசதி அடிப்படை அம்சமாக வழங்கப்பட்டுள்ளது. கார்களில் வரும் 'டேஷ் கேம்' என்ற இரு கேமராக்கள், அதற்கான பிரத்யேக டிஸ்ப்ளே, பார்கிங் மோட்கள், மூன்று ரைட் மோடுகள், 5 அங்குல டி.எப்.டி., இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஹில் ஹோல்டு வசதி, டிராக் ஷன் கன்ட்ரோல், டூயல் சேனல் ஏ.பி.எஸ்., உள்ளிட்டவை இதில் வழங்கப்படுகின்றன.
![]() |
இந்த பைக், 7.1 மற்றும் 10.3 கி.வாட்.ஹார்., என இரு லித்தியம் அயான் பேட்டரிகளில் வருகிறது. இதன் அதிகபட்ச ரேஞ்ச், 323 கி.மீ.,ராக உள்ளது. 400 சி.சி., பைக்குகளுக்கு நிகரான இந்த பைக், 100 கி.மீ., வேகத்தை 8.1 வினாடியில் எட்டுகிறது.
பாஸ்ட் சார்ஜிங் வாயிலாக முழு சார்ஜ் செய்ய, 1 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. முதல் முறையாக அதிக ஆற்றல் கொண்ட, 1.6 கி.வாட்., 'ஆன்போர்ட் சார்ஜர்' வழங்கப்பட்டுள்ளது.
'எப் 77' பைக்கில் வரும் சேசிஸ் மேம்படுத்தப்பட்டு, இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதில், யூ.எஸ்.டி., போர்க் மற்றும் டூயல் ஷாக் அப்சார்பர்கள், 320 மற்றும் 230 எம்.எம்., டிஸ்க் பிரேக்குகள், 17 அங்குல சக்கரங்கள், டூயல் பர்பஸ் டயர்கள் வந்துள்ளன. இந்த பைக், நான்கு நிறங்களில் கிடைக்கிறது.