ADDED : அக் 30, 2024 09:10 AM

'போக்ஸ்வேகன்' நிறுவனம், 50,000 விர்டுஸ் கார்களை இந்தியாவில் விற்பனை செய்து புதிய சாதனை படைத்துள்ளது.
இந்த கார், 2022ம் ஆண்டில் அறிமுகமான நிலையில், இதுவரை 6.5 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டில், இதுவரை 17,000 கார்களை விற்பனை செய்து, இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் செடான் காராக இருப்பதாக இந்நிறுவனம் அறிவித்துஉள்ளது.
விர்டுஸ் மற்றும் டைகன் கார்கள், போக்ஸ்வேகன் நிறுவனத்தின் இந்தியா 2.0 கார்களாகும். நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், இரு கார்களும் இணைந்து 1 லட்சம் விற்பனைகளை கடந்துள்ளன. போக்ஸ்வேகன் நிறுவனத்தின் மொத்த விற்பனையில், இந்த இரு கார்களின் பங்கு மட்டும் 18.5 சதவீதமாக உள்ளது.
பண்டிகை காலத்தை முன்னிட்டு, விர்டுஸ் ஜி.டி., மற்றும் விர்டுஸ் ஜி.டி., பிளஸ் ஸ்போர்ட் ஆகிய இரு வகை கார்களை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

