வோல்வோ இ.எக்ஸ்., - 40 மின்சார கார்களுக்கு தனி அடையாளம்
வோல்வோ இ.எக்ஸ்., - 40 மின்சார கார்களுக்கு தனி அடையாளம்
ADDED : நவ 27, 2024 08:47 AM

'வோல்வோ' நிறுவனம், அதன் 'எக்ஸ்.சி., - 40 ரீசார்ஜ்' மின்சார எஸ்.யூ.வி.,யின் பெயரை 'இ.எக்ஸ்., - 40' என்று மாற்றம் செய்து அறிமுகப்படுத்தி உள்ளது. கூடுதல் அம்சங்கள் வருவதால், இந்த காரின் விலை 1.15 லட்சம் ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.
டிசைன், பேட்டரி, பவர் டிரைன் உள்ளிட்டவற்றில் எந்த மாற்றமும் இல்லை. பானரோமிக் சன் ரூப், பவர்டு முன்புற சீட்கள், வயர்லெஸ் சார்ஜிங் வசதி, 9 அங்குல இன்போடெயின்மென்ட் அமைப்பு, 12 அங்குல இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்ட அம்சங்கள் இதில் உள்ளன.
புதிதாக, 360 டிகிரி கேமரா, ஹார்மன் கார்டன் சவுண்டு சிஸ்டம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.
பழைய எக்ஸ்.சி., - 40 ரீசார்ஜ் கார்கள் இன்னும் விற்பனையில் இருப்பதால், 5 லட்சம் ரூபாய் வரை சலுகை வழங்கப்படுகிறது. அதே, 'சி - 40 ரீசார்ஜ்' எஸ்.யூ.வி., கூபே காருக்கு, 1 லட்சம் ரூபாய் வரை சலுகை வழங்கப்படுகிறது.