'வொர்க்மாஸ்டர் 105' டிராக்டர் 'ஏசி', கேபின் வழங்கும் 'நியூ ஹாலாண்டு'
'வொர்க்மாஸ்டர் 105' டிராக்டர் 'ஏசி', கேபின் வழங்கும் 'நியூ ஹாலாண்டு'
UPDATED : அக் 29, 2025 10:33 AM
ADDED : அக் 29, 2025 08:39 AM

'நியூ ஹாலாண்டு' டிராக்டர் நிறுவனம், 'வொர்க்மாஸ்டர் 105' என்ற புதிய டிராக்டரை அறிமுகம் செய்துள்ளது. இது, உள் நாட்டில் உற்பத்தியாகும் இந்நிறுவனத்தின் அதிக பவர் கொண்ட டிராக்டர் ஆகும். கேபினுடன் மற்றும் கேபின் இல்லாமல் என இரு உடல் அமைப்புகளில் வந்துள்ளது.
இந்த டிராக்டர், 3,387 சி.சி., 4 - சிலிண்டர், டீசல் இன்ஜினில் வருகிறது. இந்த இன்ஜினுடன், 20 பிரண்ட் மற்றும் ரிவர்ஸ் கியர்கள் கொண்ட கியர்பாக்ஸ் மற்றும் 4 -வீல் டிரைவ் அமைப்பு இணைக்கப் பட்டுள்ளது. இதில், எரிவாயு செலவை குறைத்து, 90 சதவீதம் நச்சு உமிழ்வை தடுக்கும் நவீன எக்ஸாட்டு அமைப்பு வருகிறது.
![]() |
விவசாய பணிகளை செய்யும் 3,500 கிலோ எடை உள்ள இணைப்புகளை, இதனால் சுமக்க முடியும். வெவ்வேறு வேகங்களில் இயங்கும் வகையில், 20க்கும் அதிக மான இணைப்புகளை பொருத்திக் கொள்ளலாம்.
உயர் ரக மாடலில் மட்டும், 'ஏசி', கேபின், ஏர் சஸ்பென்ஷன் சீட்கள், ஆறு ஏர் வென்ட்டுகள், ரேடியேட்டரை தானாக சுத்தப்படுத்தி, இன்ஜின் சூட்டை குறைக்க ரிவர்ஸ் கூலிங் பேன் உள்ளிட்ட அம்சங்கள் இதில் வந்துள்ளன. இந்த டிராக்டருக்கு மூன்று ஆண்டு அல்லது 3,000 மணி நேரம் வரை உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.


