எக்ஸ்.எல்.,-750 ட்ரான்சால்ப் ஹோண்டாவின் 'அப்டேட்டட்' அட்வெஞ்சர் டூரர்
எக்ஸ்.எல்.,-750 ட்ரான்சால்ப் ஹோண்டாவின் 'அப்டேட்டட்' அட்வெஞ்சர் டூரர்
ADDED : ஜூன் 25, 2025 09:29 AM

'ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ்' நிறுவனம், அதன்' எக்ஸ்.எல்.,-750 டிரான்சால்ப்' என்ற அட்வெஞ்சர் டுரர் பைக்கை மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது. முன்பதிவு துவங்கி உள்ள நிலையில், வினியோகம் அடுத்த மாதம் முதல் துவக்கம்.
மேம்படுத்தப்பட்ட ஹெட் லைட், முன்புற விண்ட் வைசரில் ஏர்வெண்ட் வசதி, புதிய சுவிட்ச் கியர், 5 அங்குல டி.எப்.டி., கலர்டு டிஸ்ப்ளே, ப்ளூடூத் இணைப்பு, டர்ன் பை டர்ன் நேவிகேஷன் ஆகியவை இதில் கொண்டுவரப்ட்டுள்ள மாற்றங்கள். கூடுதலாக, 'த்ராட்டில் பை ஒயர்' வசதி, ஐந்து ரைட் மோடுகள், டிராக் ஷன் கன்ட்ரோல், டூயல் சேனல் ஏ.பி.எஸ்., ஸ்லிப்பர் கிளட்ச் ஆகியவை இதர அம்சங்கள் ஆகும்.
இதில், உள்ள 43 எம்.எம்., - யூ.எஸ்.டி., போர்க் மற்றும் மோனோ ஷாக் சஸ்பென்ஷகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ஏற்கனவே உள்ள 755 சி.சி., லிக்விட் கூல்டு, பேரலல் ட்வின் இன்ஜின் நீடிக்கிறது. இந்த இன்ஜினோடு, 6 - ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. சீட் உயரம் 850 எம்.எம்., கிரவுண்ட் கிளியரன்ஸ் 212 எம்.எம்., பெட்ரோல் டேங்க் 16.9 லிட்டர், எடை 208 கிலோவாக உள்ளது.