யமஹா 'எப்.இசட்., - எஸ் - எப்.ஐ., ஹைபிரிட்' 150 சி.சி.,யில் முதல் ஹைபிரிட் பைக்
யமஹா 'எப்.இசட்., - எஸ் - எப்.ஐ., ஹைபிரிட்' 150 சி.சி.,யில் முதல் ஹைபிரிட் பைக்
ADDED : மார் 19, 2025 08:39 AM

'யமஹா' நிறுவனம், 150 சி.சி., பிரிவில் முதல் ஹைபிரிட் பைக்கான 'எப்.இசட்., - எஸ் - எப்.ஐ., ஹைபிரிட்' பைக்கை அறிமுகம் செய்துள்ளது. ஸ்டாண்டர்ட் மாடல் பைக்கை விட, இந்த பைக்கின் விலை 10,000 ரூபாய் அதிகம்.
இந்த பைக்கில், யமஹா ஸ்கூட்டர்களில் வரும் ஹைபிரிட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, இதில் உள்ள ஸ்டார்ட்டர் மோட்டார் ஜெனரேட்டர், ஆட்டோ ஸ்டார்ட் ஸ்டாப் வசதியின் வாயிலாக எரிவாயு செலவைக் குறைக்கிறது. இன்ஜின் சுமையை குறைத்து பைக்கிற்கு கூடுதல் பவர் வழங்க, பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
இதனால், பைக்கின் எடை 2 கிலோ உயர்ந்து, 138 கிலோவாக உள்ளது.
இந்த பைக்கின் இன்ஜின், ஓ.பி.டி., டி2 விதிமுறைகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில், ஏற்கனவே உள்ள, 149 சி.சி., ஏர் கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. புதிதாக, 4.2 அங்குல டி.எப்.டி., டிஸ்ப்ளே, ப்ளூடூத் மற்றும் ஸ்மார்ட் போன் இணைப்பு வசதிகள், டர்ன் பை டர்ன் நேவிகேஷன், பைக் டிராக்கிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
எளிதாக கிளவுஸ் அணிந்து ஓட்டுவதற்காக ஹாண்டில் பார் சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும், இரு புதிய நிறங்களில் வந்துள்ளது.