தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கடையாணி/'யெஸ்டி ஸ்கிராம்பிளர் 350' குறைந்த எடை 350சிசி பைக்; 174 கிலோ

'யெஸ்டி ஸ்கிராம்பிளர் 350' குறைந்த எடை 350சிசி பைக்; 174 கிலோ

'யெஸ்டி ஸ்கிராம்பிளர் 350' குறைந்த எடை 350சிசி பைக்; 174 கிலோ


UPDATED : மே 20, 2026 07:50 AM

ADDED : மே 20, 2026 07:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 20, 2026 07:50 AM ADDED : மே 20, 2026 07:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'கிளாசிக் லெஜெண்ட்ஸ்' நிறுவனம், அதன் 'யெஸ்டி ஸ்கிராம்பிளர் 350' பைக்கை மேம்படுத்தி, 2026 மாடலில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கின் விலை, பழைய மாடலை விட 5,000 ரூபாய் குறைந்துள்ளது.

இதில் உள்ள 334 சிசி 'ஆல்பா' இன்ஜின், அடுத்த தலைமுறைக்கு மேம்படுத்தப்பட்டு, 'கத்தார்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்ஜினின் அதிர்வுகள் குறைக்கப்பட்டு, அதிக பிக்கப் வாழங்கும் வகையில் மேம்படுத்தியுள்ளதாக இந்நிறுவனம் கூறுகிறது. இந்த பைக்கின் எடை, எட்டு கிலோ வரை குறைக்கப்பட்டுள்ளதால், மைலேஜ் 30 கி.மீ.,ருக்கும் அதிகமாக தரும் என கூறப்படுகிறது.

Image 1578514


முன்புற டெலிஸ்கோபிக் போர்க், ட்வின் ஷாக் அப்சார்பர்கள், 19, 17 அங்குல அலாய் சக்கரங்கள், 813 எம்.எம்., சீட் உயரம், டிராக்ஷன் கன்ட்ரோல், மூன்று ரைட் மோடுகள், டூயல் சேனல் ஏ.பி.எஸ்., எல்.சி.டி., டிஸ்ப்ளே, எல்.இ.டி., லைட்டுகள் ஆகிய அம்சங்கள் இதில் இருக்கின்றன. மேலும், பைக்கின் வெளிப்புற கிராபிக்ஸ் மற்றும் டிசைன், சீட் வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us