/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
வீட்டுக்கடனில் 'டாப் அப்' முறையில் கூடுதல் தொகை பெறுவது எப்படி?
/
வீட்டுக்கடனில் 'டாப் அப்' முறையில் கூடுதல் தொகை பெறுவது எப்படி?
வீட்டுக்கடனில் 'டாப் அப்' முறையில் கூடுதல் தொகை பெறுவது எப்படி?
வீட்டுக்கடனில் 'டாப் அப்' முறையில் கூடுதல் தொகை பெறுவது எப்படி?
ADDED : ஆக 03, 2024 12:40 PM

பொதுவாக, வீடு வாங்க வேண்டும் என்று திட்டமிடுவோர், அதற்கான நிதியை திரட்ட வங்கிக்கடன் திட்டங்களையே நம்பி உள்ளனர். நாட்டில் வீட்டுக்கடன் வழங்குவதில், 2014க்கு பின் மத்திய அரசின் நடவடிக்கையால் பல்வேறு புதிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக, ஒருசில பொதுத்துறை வங்கிகளும், நிதி நிறுவனங்கள் தான் வீட்டுக்கடன் வழங்கும் என்ற நிலை, தற்போது முற்றிலுமாக மாறியுள்ளது. அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் பணி புரிவோருக்கு மட்டுமே வீட்டுக்கடன் கிடைக்கும் என்ற சூழல் தற்போது மாறியுள்ளது.
மத்திய அரசின் நடவடிக்கையின் எதிரொலியாக, பெரும்பாலான வங்கிகள், வீட்டுவசதி நிதி நிறுவனங்கள் வீட்டுக்கடன் வழங்க போட்டிபோடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தனியார் நிறுவனங்களில் பணி புரிவோரும் வங்கியில் கடன் பெற்று வீட்டுக்கடன் வாங்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஒரு குறிப்பிட்ட சொத்தை தேர்வு செய்து, அதை வாங்குவதற்காக வீட்டுக்கடன் பெற்றால், அதில் சில கூடுதல் சலுகைகள் வழங்க வங்கிகள் முன்வந்துள்ளன. குறிப்பாக, ஒரு சொத்தின் மதிப்பு, 20 லட்சம் ரூபாயாக இருக்கும் நிலையில் அதில், 90 சதவீத தொகைக்கு வங்கிகள் வீட்டுக்கடன் வழங்கும்.
ஆனால், அந்த சொத்தின் சந்தைமதிப்பு, 25 லட்சமாக உயரும் நிலையில், நீங்கள் வாங்கிய வீட்டுக்கடனில் கூடுதல் தொகை கொடுக்க வங்கிகள் முன்வரும். இதன்படி, 5 லட்சம் ரூபாய் வரை வீட்டுக்கடனில் கூடுதல் தொகையை வங்கிகளும், வீட்டுவசதி நிதி நிறுவனங்களும் வழங்கும்.
இது போன்ற கூடுதல் தொகை, ஏற்கனவே உங்கள் பெயரில் உள்ள வீட்டுக்கடன் கணக்கில் சேர்க்காமல், அதற்கு இணையாக புதிய கணக்கு துவங்கப்படும். இவ்வாறு புதிய கணக்கு துவக்கப்படும் நிலையில், அதற்கான தவணையும் தனியாக செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
வீட்டுக்கடனில் டாப் அப் என்ற முறையில் இந்த வசதியை வங்கிகளும் நிதி நிறுவனங்களும் வழங்குகின்றன. புதிதாக வாங்கிய வீட்டை சீரமைப்பது, கூடுதல் அறை கட்டுவதுபோன்ற பணிகளுக்கு என்ற காரணத்தின் அடிப்பைடையில் இந்த வசதி அளிக்கப்படுகிறது.
புதிதாக வீடு வாங்கியவர்கள் அடுத்த ஆண்டுகளில் டாப் அப் வசதியில் கூடுதல் தொகை பெற நினைத்தால் அதனால் ஏற்படும் கூடுதல் செலவுகள் குறித்த கணக்கு பார்க்க வேண்டியது அவசியம்.
இவ்வாறு நீங்கள் கூடுதல் தொகையை பெறும் முன் அது அப்போதைய சூழலில் தவிர்க்க முடியாத அவசிய தேவையா என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.