/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
தொப்பம்பட்டி பிரிவு அருகே கிழக்கு பார்த்த 5 சென்ட் இடத்தை என்ன விலைக்கு விற்கலாம்?
/
தொப்பம்பட்டி பிரிவு அருகே கிழக்கு பார்த்த 5 சென்ட் இடத்தை என்ன விலைக்கு விற்கலாம்?
தொப்பம்பட்டி பிரிவு அருகே கிழக்கு பார்த்த 5 சென்ட் இடத்தை என்ன விலைக்கு விற்கலாம்?
தொப்பம்பட்டி பிரிவு அருகே கிழக்கு பார்த்த 5 சென்ட் இடத்தை என்ன விலைக்கு விற்கலாம்?
ADDED : அக் 03, 2025 09:34 PM

கோவை மாவட்டம், குருடம்பாளையம் கிராமத்தில் தொப்பம்பட்டி பிரிவு அருகே உள்ள தனியார் நகரில் கிழக்கு பார்த்த ஐந்து சென்ட் இடம் மற்றும் இதில் கட்டியுள்ள, 10 வருடம் பழமையான தரை தளம், 1,500 சதுரடிகள், இரண்டு போர்ஷன் வீடு மற்றும் முதல் மாடியில் புதிய வீடு, 1,500 சதுரடிகள் கொண்ட இரண்டு போர்ஷன் வீட்டை விற்க எண்ணி உள்ளேன். என்ன விலை கிடைக்கும்?
-ஜீவிதா, கோவை.
தாங்கள் சொல்லும் இடம், மேட்டுப்பாளையம் ரோடு பிரிவிலிருந்து அரை கி.மீ., மற்றும் 10 நிமிடத்தில் நடந்து செல்ல முடியும் என்றால், இடத்திற்கு மட்டும் ரூ.15 லட்சம் (சென்டிற்கு)கொடுக்க முன் வருவர். 3,000 சதுரடி கட்டடம் என்பது முழு அளவிற்கு கட்டப்பட்ட ஒரு கட்டுமானம், கட்டடத்திற்கு சதுர அடிக்கு ரூ.1,000 என எடுத்துக்கொண்டால் ரூ. 30 லட்சம் என, ரூ.1.5 கோடிக்கு மேல் வரும்.
அந்த விலையையே முடித்துக் கொள்ளலாம். பொதுவாக, ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகள் விலை போகாது; சிறிது கடினமாக இருக்கும். 5 சென்ட் காலியிடம் என்பது எவ்வளவு சவுகரியமானது என்பதை, வாங்குபவர் யோசிக்கக் கூடும் என்பதையும் நினைவில் கொள்ளவும்.
கோவையில் பிரபலமான, ஐ.டி., கம்பெனி மேலாளராக பணிபுரி கிறேன். கோவையில் ஒரு அபார்ட்மென்ட் வாங்க எண்ணி உள்ளேன். வாங்கும் அபார்ட்மென்ட் யு.டி.எஸ்., கார்ப்பரேட் ஏரியா, சூப்பர் பில்டப் ஏரியா என்று சில கணக்குகளை கூறினார்கள். அது என்ன என்று எனக்கு புரியவில்லை; விளக்கம் அளிக்கவும்.
-வேணுகோபால், கோவை.
கார்ப்பரேட் ஏரியா என்பதுதான் அடிப்படை. அதற்கு மேலாக அந்த கார்ப்பரேட் ஏரியா என்பது 9 இன்ச் அல்லது 4.5 இன்ச் சுவர்களால் அடைக்கப் பட்டு இருக்கும்.
அப்படி உள்ள சுவர்கள், ஆக்கிரமிக்கும், ஏரியாவையும் உங்கள் பிளாட்டிற்கு சென்றடைய உள்ள படிகட்டு, லிப்ட் நடைபாதை வராண்டா என்று அனைவரும் பொதுவாக புழங்கும் ஏரியாவையும், கார்ப்பரேட் ஏரியாவுடன் சேர்ந்தால், நமக்கு கிடைப்பது 'சூப்பர் பில்ட் அப் ஏரியா' ஆகும்.
அடுத்து கட்டுனர், தான் வாங்கி இருக்கும் அடி நிலத்தில் மொத்தமாக எவ்வளவு சூப்பர் பில்டப் ஏரியா கட்டி உள்ளார் என பார்க்க வேண்டும். உங்களின் யு.டி.எஸ்., என்பது நீங்கள் வாங்க இருக்கும் பிளாட்டின் சூப்பர் பில்டப் /மொத்தம் கட்டப்பட்ட 'சூப்பர் பில்டப்' X மொத்த அடி எதுவாக இருப்பினும், புரமோட்டர் சொல்லும் தகவல்களை குறித்துக் கொண்டு, உங்கள் அருகில் உள்ள பதிவு பெற்ற பொறியாளரை அணுகி, தகுந்த சன்மானம் அளித்து மேற்கண்ட தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
-தகவல்: ஆர்.எம். மயிலேறு,
கன்சல்டிங் இன்ஜினியர்.