/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
கட்டட அனுமதி விஷயத்தில் 'அலர்ட்' ஆக இருக்கணும்
/
கட்டட அனுமதி விஷயத்தில் 'அலர்ட்' ஆக இருக்கணும்
ADDED : ஜன 03, 2026 05:28 AM

ஒரு கட்டுமானம் பற்றி சிந்திக்கையில் முதலில் எழும் விஷயம் அப்ரூவல் கிடைக்குமா, எவ்வளவு செலவாகும், எவ்வளவு காலம் ஆகும் என்பதே.
பின்னர் யாரை அணுகுவது என்பது. இதற்கான பதில் அளிக்கக்கூடியவர் ஒரு பதிவு பெற்ற பொறியாளரே. கிரேடு-1, கிரேடு-2, கிரேடு-3, என, மூன்று நிலைகளில் பதிவுபெற்ற பொறியாளர்கள் உள்ளனர்.
அனைத்து வகை கட்டடங்களுக்கும், லே-அவுட் அப்ரூவல் பெற 'கிரேடு-1' வகை பொறியாளர்களை அணுகலாம்.
அதிக உயரமில்லாத, 18.3 மீட்டர் வரையிலான கட்டடங்களுக்கும், 10 ஹெக்டர் மிகாத லே-அவுட் ஆகியவைகளுக்கு மட்டும் 'கிரேடு-2' பொறியாளர்களை அணுகலாம்.
பிற சிறிய கட்டடங்களுக்கும், 10 ஹெக்டர் மிகாத லே-அவுட் ஆகியவைகளுக்கு மட்டும் 'கிரேடு-3' பொறியாளர்களை அணுகலாம். பிளான், டிசைன், வரைபடம் ஆகியவைகளை விதிகளுக்கு உட்பட்டு தயாரித்து, ஒற்றை சாளர இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் வகையில் வழங்குவர்.
அதற்கான சேவை கட்டணம் வசூலிப்பர். இதுபோக அனுமதி கட்டணம் , வைப்பு தொகை பெற்று பின்னர் உள்ளாட்சி அனுமதி வழங்கும்.
வரைபட ஆய்வுக்குப்பின், இணையதளம் கட்டண கேட்பு அறிக்கை வழங்கும். அந்த கட்டணம் ஏற்புடையது எனில், இணையதளம் மூலமாகவே பணம் செலுத்தி அப்ரூவல் உத்தரவு, வரைபடம் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
காலியிட மனை வரி செலுத்த வேண்டியிருந்தால், அதை செலுத்திய பின்புதான் விண்ணப்பிக்க முடியும். மாநகராட்சிகள் அதன் நிலைகளுக்கேட்ப கட்டட அனுமதிக்கு, ஒருங்கிணைந்த கட்டணமாக குடியிருப்பு கட்டடங்களுக்கு சதுர அடிக்கு, ரூ.88, ரூ.84, ரூ.79, ரூ.74 எனவும், ரூ.110, ரூ.105, ரூ.99, ரூ.93 எனவும் பிற கட்டடங்களுக்கும் கேட்கும்.
நகராட்சிகள் அதன் நிலைகளுக்கேற்ப, கட்டட அனுமதிக்கு ஒருங்கிணைந்த கட்டணமாக குடியிருப்பு கட்டடங்களுக்கு சதுர அடிக்கு ரூ.74, ரூ.70 எனவும், ரூ.93, ரூ.87 எனவும் பிற கட்டடங்களுக்கும் கேட்கப்படுகிறது.
கூடவே கொடிநாள் நிதியாக ஒரு கட்டணமும், பாதாள சாக்கடை வைப்புத்தொகையும் சேர்த்து வசூலிக்கப்படும் என்கிறார், பதிவுபெற்ற பொறியாளர்கள் சங்க (கோவை) முன்னாள் தலைவர் கனகசுந்தரம்.

