/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
கட்டடங்களில் சோலார் பேனல் அமைக்கலாமா? உயரமான மரங்கள் இருக்கும் இடத்தை தவிர்க்க அறிவுரை
/
கட்டடங்களில் சோலார் பேனல் அமைக்கலாமா? உயரமான மரங்கள் இருக்கும் இடத்தை தவிர்க்க அறிவுரை
கட்டடங்களில் சோலார் பேனல் அமைக்கலாமா? உயரமான மரங்கள் இருக்கும் இடத்தை தவிர்க்க அறிவுரை
கட்டடங்களில் சோலார் பேனல் அமைக்கலாமா? உயரமான மரங்கள் இருக்கும் இடத்தை தவிர்க்க அறிவுரை
ADDED : ஜன 18, 2025 07:31 AM

குளியல் அறை கதவு பி.வி.சி., யு.பி.வி.சி., அல்லது மரம் இதில் எது சிறந்தது?
-ராஜ்குமார், மணியகாரம்பாளையம்.
குளியல் அறை கதவை, பி.வி.சி., அல்லது யு.பி.வி.சி., என, இரண்டிலும் அமைக்கலாம். மரத்தினாலான கதவு அமைக்கும்போது, உட்புறம் பி.வி.சி., ஷீட் ஒட்டி பயன்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் மரம் நீரினால் பாதிக்கப்படாது. பி.வி.சி., மற்றும் யு.பி.வி.சி., டோர்கள் அமைக்கும் பொழுது, தண்ணீர் பட்டாலும் கதவுகள் பாதிக்கப்படாது.
நாங்கள் வாங்க இருக்கும் பழைய வீட்டில், உட்புற மற்றும் வெளிப்புற மாடிப்படி இல்லை. தற்பொழுது மேல் மாடி கட்ட இருக்கிறோம். உட்புறமாக 'லிப்ட்' மட்டும் அமைத்துக் கொள்ளலாமா?
-செந்தில்குமார், வீரபாண்டி.
நீங்கள் அமைக்கும் வீட்டில், தாராளமாக உட்புறமாக 'லிப்ட்' அமைத்துக் கொள்ளலாம். ஆனால், மேலே செல்ல படிக்கட்டு அமைப்பது அவசியம். ஏனெனில் அவசரகாலங்களில் படிக்கட்டை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் என்ற நிலையில் லிப்டை உபயோகப்படுத்தக்கூடாது. தகுந்த பொறியாளரின் ஆலோசனையை பெற்று, உட்புறமாக லிப்ட் அமைத்துக் கொள்வது சிறந்தது.
நாங்கள் கட்ட இருக்கும் வீட்டில் செப்டிக் டேங்க் மற்றும் தண்ணீர் தொட்டி அருகருகே வருகிறது. அதை எவ்வாறு அமைப்பது?
-அசோக் குமார், போத்தனுார்.
தண்ணீர் தொட்டி கட்டும் பொழுது, கான்கிரீட் சுவர்களால் அமைத்துக் கொண்டால், வெளிப்புற நீர் உட்புகாமல் இருக்கும். செப்டிக் டேங்க் அமைக்கும்போது, கருங்கல் சுவர்களால் கட்டிய பின்னர் அதன் நீரை, சோக்பிட் அமைத்து வெளியேற்ற வேண்டும்.
நாங்கள் கட்ட இருக்கும் வீட்டில், சமையல் அறையில் 'எக்ஸாஸ்ட் பேன்' அல்லது 'சிம்னி' என, எதை அமைத்தால் சிறந்தது?
-வனிதா, துடியலுார்.
எக்ஸாஸ்ட் பேன் மற்றும் எலக்ட்ரிக் சிம்னி இதில், எது வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம். எக்ஸாஸ்ட் பேன் அமைக்கும்போது, ஆயில் போன்றவை அதில் ஒட்டிக் கொள்ளும்; பராமரிப்பு பணிகள் அடிக்கடி மேற்கொள்ள வேண்டியிருக்கும். எலக்ட்ரிக் சிம்னியில் பராமரிப்பு சற்று எளிதானது.
எங்கள் வீட்டில் சோலார் பேனல் அமைக்க முடிவு எடுத்துள்ளோம். வீட்டின் மேற்கூரையில் அமைக்கலாமா அல்லது வீட்டின் அருகில் இருக்கும் காலி இடத்தில் அமைக்கலாமா?
-பிரபாகரன், போத்தனுார்.
சோலார் பேனலை, வீட்டின் மேல் மாடியில் அமைப்பது சாலச்சிறந்ததாகும்; ஏனெனில் இடம் 'வேஸ்ட்' ஆகாது. அருகில் இருக்கும் காலி இடத்தில் அமைத்தால், இடம் வேஸ்ட் ஆகும். காலி இடத்தில் அமைக்கும்போது உயரமான மரங்களோ, கட்டடங்களோ இல்லாமல் இருக்க வேண்டும். அப்போதுதான் சூரிய வெப்பம் அதன் மேல் விழும். மேல்மாடியில் இந்த பிரச்னை இருக்க வாய்ப்பில்லை.
-திருமூர்த்தி
மக்கள் தொடர்பு அலுவலர்,
கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கம் (காட்சியா).