sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/கனவு இல்லம்/ஆலோசனை/ உறுதித்தன்மை சரி பார்க்காமல் கட்டுமான பணிக்கு கம்பி வாங்காதீர்! 

 உறுதித்தன்மை சரி பார்க்காமல் கட்டுமான பணிக்கு கம்பி வாங்காதீர்! 

 உறுதித்தன்மை சரி பார்க்காமல் கட்டுமான பணிக்கு கம்பி வாங்காதீர்! 


ADDED : மார் 07, 2026 08:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2026 08:14 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வீட்டுக்கான கட்டுமான பணியில் செலவை குறைக்க வேண்டும் என்று மக்கள் பல்வேறு புதிய வழிமுறைகளை தேடுகின்றனர். இதில் பொதுவாக கம்பிகள், சிமென்ட் போன்ற பொருட்களுக்கு தான் அதிகமாக செலவு ஏற்படுகிறது என்று மக்கள் நினைக்கின்றனர்.

இதில் புதிய வீட்டை கட்டும் பணியை ஒப்படைக்கும் போது, சதுரடிக்கு யார் மிக குறைவான தொகையை குறிப்பிடுகின்றனர் என்று பார்க்கின்றனர். இதில் முதல் தரமான கட்டுமான பொருட்களை பயன்படுத்த வேண்டும் அதே நேரத்தில் குறைந்த செலவில் வீடு கட்டப்பட வேண்டும் என்ற மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதற்காக நீங்கள் கட்டுமான ஒப்பந்ததாரர், பொறியாளரை தேர்வு செய்யும் போது இந்த விஷயத்தில் தெளிவான முடிவு செய்ய வேண்டும். கட்டுமான ஒப்பந்ததாரர்கள், பிரீமியம், ஸ்டான்டர்டு என இரண்டு வகையாக கட்டுமான பொருட்கள் பிரிக்கப்படுகின்றன.

இதில் பிரீமியம் வகை கட்டுமான பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்றால், அதற்கு ஏற்ப கட்டுமான செலவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. செலவு குறைய வேண்டும் என்றால் அதற்கு உரிய கட்டுமான பொருட்களை தான் ஒப்பந்ததாரர் பயன்படுத்துவார்.

ஆனால், பணியை பெரும் நிலையில், முதல்தரமான பிரீமியம் பிராண்டு கட்டுமான பொருட்களை பயன்படுத்துவோம் என்று கூறுகின்றனர். இதை உரிமையாளர்கள் அப்படி ஏற்காமல், எதார்த்த நிலையில் இது சாத்தியமா என்பதை யோசிக்க வேண்டும்.

இதில் டாடா, விஎஸ்பி போன்ற தயாரிப்பு கம்பிகள் மட்டுமே முதல் தரமான மூலப்பொருட்கள் பயன்படுத்தி மிக துல்லியமான தரத்தில் தயாரிக்கப்படுகிறது. இந்த முதல் தர வகையை சேர்ந்த கம்பிகளை பயன்படுத்த வேண்டும் என்றால் அதற்கான செலவும் அதிகமாக இருக்கும்.

இதில் உங்கள் வீட்டு கட்டுமான பணிக்கு பிரீமியம் தரத்தில் கட்டுமான பொருட்களை பயன்படுத்துகிறோம் என்று கூறிவிட்டு போலிகளை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. சந்தையில் பிரபலமான பெரிய நிறுவனங்கள் பெயரில் போலி தயாரிப்புகள் நடமாடுகின்றன.

குறைந்த செலவில் வீட்டை கட்டி கொடுக்கிறோம் என்பதற்காக சிலர் இது போன்ற போலி பொருட்களை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. இதில் வீட்டுக்கான கட்டுமான செலவில் சதுரடிக்கான தொகையை முடிவு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும்.

முதல்தரமான உறுதியான பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்றால் அதற்கு ஏற்ற விலையை கொடுக்க உரிமையாளர்கள் முன்வர வேண்டும். கட்டுமான பணிகளுக்கு மிகவும் தரமான பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்பதில் எவ்வித சமரசமும் செய்து கொள்ள கூடாது என்கின்றனர் கட்டுமான துறை வல்லுநர்கள்.

குறைந்த செலவில் வீட்டை கட்டி கொடுக்கிறோம் என்று சிலர் போலி பொருட்களை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது, வீட்டுக்கான கட்டுமான செலவில் சதுரடிக்கான தொகையை முடிவு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us