/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
குறைந்த நேரத்தில் பெரிய பரப்பை கையாள உதவும் 'ட்ரோன் சர்வேயிங்' துல்லிய முறை
/
குறைந்த நேரத்தில் பெரிய பரப்பை கையாள உதவும் 'ட்ரோன் சர்வேயிங்' துல்லிய முறை
குறைந்த நேரத்தில் பெரிய பரப்பை கையாள உதவும் 'ட்ரோன் சர்வேயிங்' துல்லிய முறை
குறைந்த நேரத்தில் பெரிய பரப்பை கையாள உதவும் 'ட்ரோன் சர்வேயிங்' துல்லிய முறை
ADDED : டிச 06, 2024 11:31 PM

கட்டுமான துறையில் நவீன தொழில்நுட்பங்களின் வருகை, வேலைகளை எளிமையாக்கி வருகிறது. அதில் ஒன்று 'ட்ரோன் சர்வேயிங்'. இந்த வகை சர்வே, கட்டுமான துறையில் புரட்சியை ஏற்படுத்தும் ஒரு நவீன தொழில்நுட்பம்.
சிறு வான்வழி வாகனம் பயன்படுத்தி, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வேகம், துல்லியம் மற்றும் பாதுகாப்புடன் சர்வே மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ளலாம். கட்டுமானம் நில அளவையியல் மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்களில், பல்வேறு சவால்களை சமாளிக்கக்கூடிய திறன் காரணமாக, இந்த முறை அதிக பிரபலமடைந்து வருகிறது.
பி.ஏ.ஐ., கோவை மைய பசுமை கட்டட குழு தலைவர் வெங்கட சுப்பிரமணியம் கூறியதாவது:
'ட்ரோன் சர்வேயிங்' என்பது கேமராக்கள், சென்சார்கள் மற்றும் பூமியில் இடத்தை காட்டும் கருவி(ஜி.பி.எஸ்.,) தொழில்நுட்பங்களுடன் பயன்படுத்தி விபரங்கள் சேகரிப்பது. இந்த விபரங்கள் மிகுந்த துல்லியத்துடன் வரைபடங்களை உருவாக்க செயலாக்கப்படுகின்றன.
நில அளவையியல் துறையில் ட்ரோன்கள் விரைவாக, பெரிய பரப்புகளை கையாள முடியும். இது நில அளவியியலுக்கு சிறந்ததாக உள்ளது.
திட்டமிடல், எல்லைக் குறிப்பீடு மற்றும் சொத்து மேம்பாடு போன்றவைகளுக்கு துல்லியமான அளவீடுகளை வழங்குகிறது.
ட்ரோன்கள் கட்டுமான நிலங்களில், அணுக முடியாத பகுதிகளை ஆய்வு செய்ய பயன்படுத்தலாம். உதாரணமாக, மேற்பரப்புகள் மற்றும் உயரமான கட்டடங்களில் இது பாதுகாப்பு ஆபத்துகளை அடையாளம் காண உதவுகிறது. அவை உயர்தர புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வழங்குகிறது.
இதன் வாயிலாக கட்டமைப்பு பிரச்னைகள், சிதைவுகள் மற்றும் மற்ற குறைகளை அடையாளம் காண உதவுகிறது. முன்பு ஒரு நிலத்தை அளவீடு செய்ய நிலத்தை முதலில் சுத்தம் செய்ய வேண்டும். ஆனால், இந்த முறையில் எவ்வித வேலைபாடுகளும் செய்யாமல் அப்படியே அளக்க முடியும்.
இந்த தொழில்நுட்பம் பாதுகாப்பை மேம்படுத்தவும், செலவுகளை குறைக்கவும் உதவுகிறது.
ஆழமான அல்லது நிரப்பப்பட்ட மண்ணின் அளவுகளை துல்லியமாக கணக்கிட பயன்படுத்தப்படுகிறது.
அபாய மேலாண்மைகளில் பேரிடர் நிகழ்வுகளுக்கு பின்னர், ட்ரோன்கள் கட்டட சேதங்களை மதிப்பீடு செய்து, வேகமான பதிலளிப்பு மற்றும் மீட்பு திட்டங்களை உருவாக்க உதவுகிறது.
பாரம்பரிய முறைகளுடன் ஒப்பிடும்போது, ட்ரோன் சர்வேயிங் குறைந்த நேரத்தில் பெரிய பரப்புகளை கையாள முடியும். மேம்பட்ட சென்சார்களுடன்கூடிய ட்ரோன்கள், திட்டமிடல் பிழைகளை குறைத்து, துல்லியமான தரவுகளை வழங்குகின்றன.
செயலாக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் நில வரைபடங்கள், டிஜிட்டல் மாடல்கள் அல்லது 3டி கட்டட மாதிரிகள் போன்ற பலவிதமான வெளியீடுகள் உருவாக்கப்படுகின்றன. இறுதியாக, அனைத்து தரவுகளும் சேர்க்கப்பட்ட அறிக்கைகள் உருவாக்கப்படுகின்றன.
இவ்வாறு, அவர் கூறினார்.