sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

கனவு இல்லம்

/

ஆலோசனை

/

 ஆற்றல் திறன் கொண்ட கட்டடங்களை ஊக்குவிக்கும் பசுமை கட்டட விதிகள்

/

 ஆற்றல் திறன் கொண்ட கட்டடங்களை ஊக்குவிக்கும் பசுமை கட்டட விதிகள்

 ஆற்றல் திறன் கொண்ட கட்டடங்களை ஊக்குவிக்கும் பசுமை கட்டட விதிகள்

 ஆற்றல் திறன் கொண்ட கட்டடங்களை ஊக்குவிக்கும் பசுமை கட்டட விதிகள்


UPDATED : டிச 27, 2025 07:39 AM

ADDED : டிச 27, 2025 05:24 AM

Google News

UPDATED : டிச 27, 2025 07:39 AM ADDED : டிச 27, 2025 05:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பசுமைக் கட்டடங்களின் முக்கிய நோக்கமானது சுற்றுச்சூழல் பாதிப்பை குறைப்பதும், மக்களின் வாழ்வு நிலைத்ததாக இருப்பதையும் உறுதி செய்வதும்தான். கட்டடத்தின் அனைத்து பகுதிகளையும் கவனத்தில் கொண்டு, அவற்றை திறமையாக நிர்வகித்து, இயற்கைக்கு சேதம் ஏற்படாதபடி செய்வதே இதன் அடிப்படை நோக்கம்.

இக்கட்டுமானத்துக்கு மறுசுழற்சி செய்யப்பட்ட அல்லது மீண்டும் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், விரைவாக மீண்டும் வளரக்கூடிய வளங்களும் பயன்படுத்துகிறது. இது பூமியை பாதுகாக்க உதவுகிறது.

கட்டுமானத்தின்போது அதிக அளவு கழிவுகள் உருவாகின்றன. பசுமை கட்டடங்களில் மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி வாயிலாக கழிவுகளை குறைக்க முயற்சி செய்யப்படுகிறது.

இந்த வகை கட்டடங்களில் புதிய தொழில்நுட்பங்கள், புதுமையான கட்டுமான முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

இதில் ஸ்மார்ட் கட்டட அமைப்புகள், மேம்பட்ட உள்வெப்பத் தடுப்பு முறைகள், பசுமை கூரைகள், நீர் ஊடுருவக்கூடிய தரைகள் போன்றவை அடங்கும். 'லீடர்சிப் இன் எனர்ஜி அண்ட் என்வயரான்மென்டல் டிசைன்' போன்ற அமைப்புகள் ஒரு கட்டடம் பசுமையானதா என்பதை மதிப்பீடு செய்ய விதிகளை வகுக்கின்றன.

அவை ஆற்றல் பயன்பாடு, நீர் சேமிப்பு மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம் போன்றவற்றை கண்காணிக்கின்றன. இதேபோல் 'இந்தியன் கிரீன் பில்டிங் கவுன்சில்' உள்ளது.

பசுமைக் கட்டடம் என்பது புத்திசாலியான திட்டமிடலுடன், கட்டடங்களை உருவாக்குவது போன்றது.

இது எப்போதும் புதிய யோசனைகள் மற்றும் கருவிகளுடன் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இன்றைய தேவைகளை பூர்த்தி செய்வதுடன், எதிர்கால தலைமுறைகளுக்காக பூமியை பாதுகாப்பதே இதன் முக்கிய நோக்கம்.

இன்று நாம் பயன்படுத்துவதை சமநிலையாக செய்து, நாளைய மக்களுக்கு போதுமான வளங்கள் இருக்கச்செய்வதே பசுமைக் கட்டடத்தின் அடிப்படை எண்ணம். இந்திய அரசு பல்வேறு திட்டங்கள் மற்றும் விதிமுறைகளை உருவாக்கியுள்ளது.

'நேசனல் பில்டிங் கோடு ஆப் இந்தியா' மற்றும் 'எனர்ஜி கன்சர்வேசன் பில்டிங் கோடு' போன்றவை, உயர்தர மற்றும் ஆற்றல் திறன் கொண்ட கட்டடங்களை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளன என்கிறார் 'காட்சியா' உதவி மக்கள் தொடர்பு அலுவலர் டேனியல்.






      Dinamalar
      Follow us