தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கனவு இல்லம்/ஆலோசனை/ நவீன தொழில்நுட்பத்தில் 'காம்போசிட் பில்டிங்'; கட்டுமானம் செலவை குறைத்து துரிதமாக கட்ட முடியும்

 நவீன தொழில்நுட்பத்தில் 'காம்போசிட் பில்டிங்'; கட்டுமானம் செலவை குறைத்து துரிதமாக கட்ட முடியும்

 நவீன தொழில்நுட்பத்தில் 'காம்போசிட் பில்டிங்'; கட்டுமானம் செலவை குறைத்து துரிதமாக கட்ட முடியும்


UPDATED : ஜன 17, 2026 06:14 AM

ADDED : ஜன 17, 2026 05:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 17, 2026 06:14 AM ADDED : ஜன 17, 2026 05:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'மைவான் ஷட்டரிங்' கட்டுமானத்தை பற்றி விளக்கமாக கூறவும்?: -ராம்குமார்: காலத்திற்கு ஏற்ப நவீன கட்டுமான முறைகள் மாறுபடுகின்றன. இன்றைய சூழ்நிலையில் கட்டுமான பணியாளர்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது. 'மைவான் ஷட்டரிங்' கட்டுமான முறை என்பது அலுமினிய பார்ம் பேனர்களை பயன்படுத்தி சுவர்கள் 6 அங்குலம் தடிமன் உள்ளவாறு மிக வேகமாக கட்டப்படும் கட்டுமான முறையாகும்.

இம்மாதிரியான நவீன கட்டுமான முறைகள் பல அடுக்குமாடி தளங்களை கொண்ட கட்டடங்களை கட்ட பயன்படுத்தப்படுகிறது. ஒரே நேரத்தில் சுவர்களுக்கும் கூரைகளுக்கும் கான்கிரீட்கள் ஊற்றி, குறுகிய காலத்தில் கட்டடத்தை முடிக்க இந்த முறை கட்டுமானங்கள் எளிமையாகவும் துல்லியமாகவும் இருக்கும்.

நாங்கள் புதிதாக கட்ட உள்ள வீட்டிற்கு: -வசந்தகுமார்: எப்.ஆர்.ஜி.எஸ்., பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு சந்தையில் கிடைக்கிறது. இரும்பு கம்பிகளுக்கு இணையாகவும் மாற்று வலுவூட்டலுக்கும் இதை பயன்படுத்தலாம். பிரதானமாக இல்லாமல் இரண்டாம் நிலை தேவைகளுக்கு பயன்படுத்தலாம். தங்களின் கட்டட வடிவமைப்பு பொறியாளரிடம் ஆலோசனை பெற்று பயன்படுத்துவது சிறந்தது.

எங்களது பழைய வீட்டை இடித்து புதிய வீடு கட்ட உள்ளோம். பழைய வீட்டின் கட்டுமான கட்டட கழிவுகளை மாற்றுக்கட்டுமான பொருளாக உபயோகிக்கலாமா?: -முகேஷ்: தங்களின் மாற்றுக் கட்டுமான சிந்தனைக்கு முதலில் தலை வணங்குகிறேன். தற்போது பழைய கட்டடத்தின் கழிவுகள் நிலத்தில் கொட்டப்பட்டு வீண் விரயம் செய்யப்படுகிறது. சென்னை போன்ற பெரு நகரங்களில் இந்த கட்டுமான கட்டட பொருட்கள் தரம் பிரித்து, மாற்று கட்டுமானப் பொருளாக பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, 'பேஸ்மென்ட் பில்லிங்' பொருளாக பயன்படுத்தலாம். 'டெப்ரீஸ் வால்' காம்பவுண்டாக இந்த கட்டட கழிவுகளை, மதிப்பு கூட்டப்பட்ட கட்டுமான முறையாகவும் பயன்படுத்தலாம்.

எங்கள் வீட்டின் கட்டடத்தில் பேஸ்மென்டில் ஈரப்பதம் அதிகமாகவும் பூச்சுகள் வலிமை இழந்தும் உள்ளது. ஈரப்பதத்தை கட்டுப்படுத்தி கட்டடத்தை எவ்வாறு சரி செய்யலாம்?: -ஆனந்தன்: ஈரப்பதம் அதிகரிப்பதன் காரணமாக, கட்டடத்தின் வலிமை குறையும். பூச்சுகள் சேதமடைந்தும் முன்புற அழகுகள் நிறம் மாறி குடியிருப்பவர்களுக்கும் கடுமையான உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

கட்டடத்தின் பராமரிப்பு செலவு கூடுவதுடன், ஆயுட்காலமும் குறையும். கட்டடத்தில் வரும் ஈரப்பதத்தை உடனே சரி செய்வது முக்கியம்.

கட்டுமான சந்தையில் ஈரப்பதத்தை கட்டுப்படுத்தும் அமிலங்கள் கிடைக்கின்றன. தகுந்த பொறியாளரை அணுகி ஆலோசனைகள் பெற்று விரைவில் சரி செய்து கொள்ளவும்.

புதிதாக கட்ட உள்ள தொழிற்சாலையை: -வரதராஜன்: 'காம்போசிட் பில்டிங்' கட்டுமானம் என்பது, பல கட்டுமான பொருட்களை ஒன்றாக பயன்படுத்தும் முறை. நவீன கட்டுமானத்தில் இரும்பு, கான்கிரீட் மற்றும் ஏ.ஏ.சி., பிளாக்ஸ் போன்ற நவீன கட்டுமான பொருட்களை கொண்டு கட்டும்போது வேகமாகவும் அதிக கட்டுமான செலவை குறைத்து சரியான விலையில் கட்டவும் முடியும். இதனால் காலமும் பொருளாதாரமும் சேமிக்கப்படுகிறது.

-விஜயகுமார்: முன்னாள் தலைவர்: கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர் சங்கம்(காட்சியா).:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us