தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கனவு இல்லம்/ஆலோசனை/ ரெடிமிக்ஸ் கான்கிரீட் கலவை வாங்குவதில் மூன்றாவது நபர் தலையீடு வேண்டாம்!

 ரெடிமிக்ஸ் கான்கிரீட் கலவை வாங்குவதில் மூன்றாவது நபர் தலையீடு வேண்டாம்!

 ரெடிமிக்ஸ் கான்கிரீட் கலவை வாங்குவதில் மூன்றாவது நபர் தலையீடு வேண்டாம்!


ADDED : மார் 07, 2026 08:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2026 08:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமது நாட்டில் சிமென்ட் பயன்பாடு மிகவும் அதிகம் என்ற எண்ணம் பரவலாக காணப்படுகிறது. ஆனால், உலகின் பல்வேற நாடுகளை ஒப்பிடும் போது நமது நாட்டில் கட்டுமான பணிக்கான சிமென்ட் பயன்பாடு குறைவாக தான் உள்ளதாக கட்டுமான துறை வல்லுநர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற காரணங்கள் அடிப்படையில் கட்டுமான பணிகளில் சிமென்ட் பயன்பாட்டை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் ஒரு முக்கிய முன்னேற்றமாக, கான்கிரீட் கலவை தயாரிப்புக்கான வழிமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.

வழக்கமாக, ஜல்லி, மணல், சிமென்ட் ஆகியவற்றுடன் தண்ணீரை சேர்த்து கான்கிரீட் கலவை தயாரிக்கப்படும். இதில் குறிப்பிட்ட சில நடைமுறைகளை மாற்றுவதால் சிமென்ட் பயன்பாட்டை குறைக்கலாம் என்று அதற்கான புதிய வழிமுறைகள் அறிமுகமாகி மக்களின் ஆதரவை பெற்று வருகிறது.

இந்த வகையில் கட்டுமான பணிக்கான கான்கிரீட் கலவை தயாரிப்பில் சிமென்ட் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்துவதை முறைப்படுத்த ரெடிமிக்ஸ் முறை, 1994ல் நமது நாட்டில் அறிமுகமானது. இதில் வரையறுக்கப்பட்ட வழிகாட்டுதல் அடிப்படையில் சிமென்ட் உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுவதால், பொருட்கள் அளவோடு பயன்படுத்தப்படும்.

ரெடிமிக்ஸ் ஆலைகளில் கான்கிரீட் கலவை தயாரிக்கும் போது அதில் ஜல்லி, மணல், ஆகியவற்றுடன் சேர்க்கப்படும் சிமென்ட் அளவு குறைக்கப்பட்டு எரிசாம்பல், இரும்பாலை கழிவுகள் சேர்க்கப்படுகின்றன. இதனால், கட்டுமான பணிகள் விரைவாக முடிக்கப்பட வாய்ப்பு ஏற்படுகிறது.

தற்போதைய சூழலில், பெரும்பாலான இடங்களில் ரெடிமிக்ஸ் கான்கிரீட் கலவை தயாரிக்கும் ஆலைகள் வந்துவிட்டன. உங்கள் பகுதிக்கு அருகில் செயல்படும் ரெடிமிக்ஸ் நிறுவனத்தை நேரடியாக தொடர்பு கொண்டு கான்கிரீட் தேவை குறித்து தெரிவித்து தேவையான கலவையை வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கலாம்.

இது விஷயத்தில் வழக்கமான செங்கல், மணல் போன்று ஹார்டுவேர் நிறுவனத்தை அணுகினால், உங்கள் தேவை என்ன என்பது ஆலைக்கு சென்று சேராது. குறிப்பாக, கட்டுமான பொறியாளர் கேட்கும் தரத்தில் கான்கிரீட் கலவை பிரச்னை இன்றி கிடைக்க வேண்டும் என்றால், நீங்கள் நேரடியாக ஆலை நிர்வாகத்தை தொடர்பு கொள்வதே நல்லது.

அப்போது தான் உங்கள் உண்மையான தேவையை புரிந்து அதற்கு ஏற்ற வகையில் ரெடிமிக்ஸ் கான்கிரீட் கலவையை சம்பந்தப்பட்ட நிறுவனம் அனுப்ப வாய்ப்பு ஏற்படும். குறிப்பாக, உங்கள் வீட்டு கட்டுமான பணிக்கு எந்த நிலையில், என்ன வகையான கான்கிரீட் கலவை தேவை என்பதை புரிந்து அதற்கு ஏற்ற கலவையை வாங்குவது நல்லது.

கட்டடத்தின் எந்த பாகத்துக்கான கட்டுமான பணிக்கு, என்பதை தெளிவாக தெரிவித்து அதற்கு ஏற்ற வகை மற்றும் தரத்திலான கான்கிரீட் கலவையை வாங்குவது நல்லது. இதனால், கட்டுமானங்களின் உறுதி, அமைப்பு போன்ற விஷயங்களில் எவ்வித குறைபாடும் ஏற்படாமல் பணிகளை சிறப்பாக முடிக்க வாய்ப்பு ஏற்படும்.

இது மட்டுமல்லாது, நீங்கள் ரெடிமிக்ஸ் கலவையை நேரடியாக சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரிடம் இருந்து வாங்குவது தான் சரியானதாக இருக்கும். மூன்றாவது நபர் வாயிலாக வாங்கும் போது, தரம் மற்றும் வகையில் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்கின்றனர் கட்டுமான துறை வல்லுநர்கள்.

கட்டடத்தின் எந்த பாகத்துக்கான கட்டுமான பணிக்கு, என்பதை தெளிவாக தெரிவித்து அதற்கு ஏற்ற வகை மற்றும் தரத்திலான ரெடிமிக்ஸ் கான்கிரீட் கலவையை வாங்குவது நல்லது

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us