தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கனவு இல்லம்/ஆலோசனை/ கரென்ட் 'கட்' ஆனாலே கடுப்பாகிறது; சூரிய ஒளி மின்சாரத்தால் சுகமாகிறது

 கரென்ட் 'கட்' ஆனாலே கடுப்பாகிறது; சூரிய ஒளி மின்சாரத்தால் சுகமாகிறது

 கரென்ட் 'கட்' ஆனாலே கடுப்பாகிறது; சூரிய ஒளி மின்சாரத்தால் சுகமாகிறது


ADDED : பிப் 07, 2026 05:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2026 05:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நா ளுக்கு நாள் மின் தேவை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது; குறைவதற்கு வாய்ப்பே இல்லை. மின்சாரம் இல்லை என்று புலம்புவதைவிட வீடு கட்டும்போதே இயற்கையாக கிடைக்கும் சூரிய ஆற்றலை, மின் தேவைக்கு பயன்படுத்துவதை பற்றி யோசிக்க வேண்டிய தருணம் இது.

'கொசினா' உறுப்பினர் மாரிமுத்துராஜ் கூறியதாவது: மின் இணைப்புகளை வீட்டின் எல்லா இடங்களிலும் பக்காவாக அமைக்க வேண்டும். மின்சாரம் இல்லாதபோது மாற்று ஏற்பாடாக, சோலார் முறை இருந்தால் பல நடைமுறை சிக்கல்கள் தவிர்க்கப்படும்.

வீட்டின் வெளி காம்பவுண்டில், மொட்டை மாடியில் சோலார் விளக்குகள் இருந்தால் இரவு நேரத்திலும் மின் கட்டணம் பற்றி கவலைப்படாமல் எரியவிடலாம். சோலார் விளக்குகள் அனைத்தும் தன்னிச்சையாக 'ஆன்', 'ஆப்' செய்யக்கூடிய வகையில் உள்ளன.

வீட்டை பூட்டிவிட்டு பத்து நாள் வெளியூர் சென்றால்கூட, வெளியில் இருக்கும் சோலார் விளக்குகள் தானாகவே மாலையில் எரிந்து, காலையில் அணைந்துவிடும். எனவே, சமூக விரோதிகளிடம் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.

வாடகை வீட்டில்கூட இந்த முறையை பொருத்தலாம். வீடு மாறும்போது எடுத்துக்கொண்டு போய்விடலாம். இன்வெர்ட்டரில் பயன்படுத்தப்படும் பேட்டரியை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.

இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மட்டுமே தற்போது அதிகளவில் சோலார் பேனல் அமைக்க ஆர்வம் காட்டுகின்றனர். அரசும் மானியம் பெறுவதற்கும், சோலார் பேனல் மற்றும் பொருட்களை வாங்குவதற்கும் www.mnrc.gov.in என்ற இணைதளங்கள் வாயிலாக பயன்பெறலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us