தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கனவு இல்லம்/ஆலோசனை/ மழைநீரை சேமித்து வைக்கும் 'போர்வெல்' வரைபடம் தயாரித்து தவிர்க்கலாம் பாதிப்பு

 மழைநீரை சேமித்து வைக்கும் 'போர்வெல்' வரைபடம் தயாரித்து தவிர்க்கலாம் பாதிப்பு

 மழைநீரை சேமித்து வைக்கும் 'போர்வெல்' வரைபடம் தயாரித்து தவிர்க்கலாம் பாதிப்பு


ADDED : மார் 28, 2026 05:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2026 05:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வீ டுகளில் மழைநீர் வடிகால் கட்டமைப்பு செய்வது அவசியமான ஒன்று. அதேசமயம், மழைநீர் வடிகால்கள் மொத்தத்தையும் கொண்டுபோய் 'சோக் பிட்டில்' சேர்ப்பதும் நடப்பதுண்டு. ஆனால் 'போர்வெல்'லில் சேர்ப்பதே சிறந்தது.

கிணறு இல்லாதவர்கள் மழைநீரை போர்வெல் மோட்டார் இணைப்பில்தான் சேமிக்க வேண்டும். அதற்கு ஒரு எளிமையான முறை உள்ளது. அதாவது போர்வெல்லில் இருந்து சுற்றளவு மூன்று அடி அல்லது நான்குஅடி விட்டத்தில் குழி தோண்டிக்கொள்ள வேண்டும்.

இடத்தை பொறுத்து இன்னும் அகலப்படுத்திக்கொள்ளலாம். 4 முதல் 6 அடி வரை ஆழம் இருக்கலாம். இப்போது போர்வெல் குழாயை சுற்றி 6 அடி ஆழத்தில் ஒரு குழி உண்டாக்கி, தரைக்கு கீழே 3 அடி, தரைக்கு மேலே பேஸ்மென்ட் உயரத்தில் 3 அடி என கணக்கு வைத்துக்கொள்ள வேண்டும்.

போர்வெல் துளையில் உள்ள குழாயில் முதலில் துளைகளிட்டு பின் அதன்மீது ஒரு தரமான 'நைலான் மேட்' கொண்டு சுற்ற வேண்டும். இதுவொரு வடிகட்டி போல் செயல்படும். இப்போது, 6 அடி குழாயில் கீழ்மட்டத்தில் பெரிய கற்களை ஒன்றரை அடி உயரத்தில் போட்டு நிரப்ப வேண்டும்.

கட்டடத்தின் ஒட்டுமொத்த மழைநீர் வடிகால் குழாயை அந்த குழியில் கொண்டுவந்து சேர்த்துவிட்டால் சுத்தமான மழைநீர் அந்த குழியில் விழுந்து பல நிலைகளில் வடிக்கட்டப்பட்டு, நைலான் மேட்டில் இன்னும் வடிகட்டப்பட்டு போர்வெல் குழாயின் துளைகள் மூலம் ஆழ்துளை கிணற்றில் போய் சேர்த்துவிடும்.

இதனால் அந்த பகுதியிலேயே நிலத்தடி நீர் மட்டம் உயருகிறது. அறிவியல் பூர்வமாக இதை செய்துவருகின்றனர். மழைநீரை துளியும் விடாமல் சேகரிப்பதற்கு உண்டான வரைபடத்தை தயாரித்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தலாம்.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், போர்வெல் அமைக்கப்படும் இடங்களில் இந்த முறையால் மழைநீரை சேமிப்பது அவசியம்.

மழை பொய்க்கும் சமயத்தில் இந்த வகையான தண்ணீர் சேமிப்பு கைகொடுக்கும் என்கிறார் 'கொசினா' உறுப்பினர் மாரிமுத்துராஜ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us