/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
வீடு கட்டுமான இடத்தில் பாதுகாப்பு மிகவும் முக்கியம்
/
வீடு கட்டுமான இடத்தில் பாதுகாப்பு மிகவும் முக்கியம்
வீடு கட்டுமான இடத்தில் பாதுகாப்பு மிகவும் முக்கியம்
வீடு கட்டுமான இடத்தில் பாதுகாப்பு மிகவும் முக்கியம்
ADDED : ஆக 08, 2025 08:39 PM

கட்டுமானத்தின் போது பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவாக உள்ளதால், கட்டடங்களில் அடிக்கடி விபத்து ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது.
உதாரணத்துக்கு, சென்னை மவுலிவாக்கம் கட்டட விபத்து. சில கட்டுமான நிறுவனங்களில் ஏற்படும் விபத்தை செய்திகளின் வாயிலாக மட்டுமே அறிகிறோம். பல இடங்களில் நடக்கும் விபத்துகள் வெளியே தெரிவதில்லை.
விபத்துகளுக்கு காரணம், மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை என்பதே. கட்டுமானத்தின்போது சாரத்தின் மேல் அதிக எடை ஏற்றப்படுவதாலும், சாரத்தின் மேல் நடப்பவர்களின் பயத்தினாலும் விபத்து ஏற்படுகிறது.
ஏணியின் மேல் ஏறி வேலை செய்யும்போது, ஏணியை நன்றாக பொருத்தி, குறிப்பாக இதன் சாய்வு, நான்கு அடி உயரத்துக்கு ஒரு அடி அகலம் என்ற முறையில், சாய்வாக பொருத்தி, நன்கு பிணைத்து அதற்கு மேல் வேலை செய்ய அனுமதிக்கலாம்.
உயரமான இடத்தில் ஏணியின்மேல் வேலை செய்யும்போது, பயத்துடன் பணிபுரிபவர்களை தவிர்ப்பது நல்லது. கட்டாயப்படுத்தி வேலை செய்ய நிர்பந்திக்கும்போது விபத்துகள் ஏற்படலாம்.
ஏணியில் ஏறுபவர்கள் பாதுகாப்பு பெல்ட், தலைக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அணிவதை கட்டாயப் படுத்த வேண்டும் என்கின்றனர் பொறியாளர்கள்.