தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கனவு இல்லம்/ஆலோசனை/ கட்டுமான பகுதியில் கம்பி வளைப்புக்கு விடைகொடுங்கள்!

 கட்டுமான பகுதியில் கம்பி வளைப்புக்கு விடைகொடுங்கள்!

 கட்டுமான பகுதியில் கம்பி வளைப்புக்கு விடைகொடுங்கள்!


ADDED : மே 23, 2026 07:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2026 07:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொதுவாக ஒரு நிலத்தில் வீடு கட்ட வேண்டும் என்றால் அதில் தற்போது டி.எம்.டி., கம்பிகள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. கட்டுமான பணியில் அஸ்திவாரம் அமைப்பது முதல் மேல் தளம் வரை ஒவ்வொரு நிலையிலும் டி.எம்.டி., கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன.

இதற்காக, கம்பிகள் வாங்கி பயன்படுத்தப்படும் நிலையில் அது எப்படி நடக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். இதன்படி, ஒரு கட்டடம் கட்டும் போது, அங்கு மொத்தமாக கம்பிகள் வாங்கப்பட்டு தேவையான வடிவமைப்புகளுக்கு வெட்டப்படும்.

வீடுகட்டப்படும் இடத்தில் கம்பிகளை தேவையான அளவுக்கு வெட்டுவது மட்டுமல்லாது, உரிய வடிவமைப்புகளில் வளைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். கட்டுமான பணிகள் நடக்கும் இடத்தில் தற்காலிக மேடை அமைத்து, அங்கு தேவையான வடிவங்களில் கம்பிகள் வளைக்கப்படும்.

ஒரு இடத்தில் வீடு கட்டும் பணிகள் நடக்கிறது என்றால் அதை அடையாளப்படுத்தும் வகையில் கம்பி வளைப்பு மேடை உள்ளிட்டவை இருக்கும். ஆனால், சமீப காலமாக இத்தகைய மேடைகள் அமைக்கும் பழக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.

இந்நிலையில், கட்டுமான பணியில், அஸ்திவாரம் முதல், மேல்தளம் வரை, ஒவ்வொரு நிலை யிலும் ரிங் அமைக்க கம்பிகள் வளைக்கப்படுவது அவசியம். தற்போது, கட்டடங்களுக்கு தேவையான அளவில், ரிங் போன்ற அமைப்புகளில் ரெடிமேட் முறையில் கம்பிகள் வழங்கப்படுகின்றன.

இது போன்ற புதிய வழிமுறைகள் வந்துள்ள நிலையில், கட்டுமான பணியிடத்தில் கம்பி வளைப்புக்கு இனி அவசியம் இல்லை என்று கூறப்படுகிறது. இதில் உங்கள் கட்டுமான பணியில் எத்தகைய கம்பிகள் தேவை என்பதை பார்த்து அதற்கு ஏற்ற கம்பி ரிங்குகளை வாங்க வேண்டும்.

இதில், ஒரு கட்டடம் கட்டப்படும் நிலையில் அதில் எந்த பாகத்தில் எத்தகைய கம்பிகளை பயன்படுத்த வேண்டும் என்பதுடன் அதற்கான ரிங்குகள் விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். புதிய வீடு கட்டும் போது கட்டட அமைப்பியல் பொறியாளர் பரிந்துரை அடிப்படையில் கம்பிகளை வாங்க வேண்டும்.

கட்டுமான பகுதியில் கம்பிகளை வளைப்பதற்கு போதிய இடவசதி இல்லாத நிலையில், ரெடிமேட் கம்பிகளை வாங்குவது நல்லது. இத்தகைய சூழலில், ரிங்குகள், கூடுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் கம்பிகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

கம்பி விஷயத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை சரியாக புரிந்து அதற்கான வழிமுறைகளை கடைப்பிடித்தால் தரமான முறையில் புதிய வீட்டை கட்டி முடிக்கலாம். இதில் தொழில்முறை வல்லுனர்கள் வழிகாட்டுதல்கள் அவசியம் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.

கட்டுமான பகுதியில் கம்பிகளை வளைப்பதற்கு போதிய இடவசதி இல்லாத நிலையில், ரெடிமேட் கம்பிகளை வாங்குவது நல்லது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us