தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கனவு இல்லம்/ஆலோசனை/ வீடுகளில் பதிகற்களுக்கு போட்டியாக வந்துள்ள 'ஸ்டோன் கார்பெட்!'

 வீடுகளில் பதிகற்களுக்கு போட்டியாக வந்துள்ள 'ஸ்டோன் கார்பெட்!'

 வீடுகளில் பதிகற்களுக்கு போட்டியாக வந்துள்ள 'ஸ்டோன் கார்பெட்!'


ADDED : ஏப் 11, 2026 07:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2026 07:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதிதாக வீடு கட்டும் போது அதன் ஒவ்வொரு பாகமும் எப்படி அமைய வேண்டும் என்பதில் மக்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர். பொதுவாக, கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் நீண்ட காலம் உழைக்க வேண்டும், செலவு குறைவாக இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த வகையில் வீட்டுக்கான தரை அமைப்பதில் பல்வேறு புதிய வழிமுறைகள் மக்கள் பயன்பாட்டுக்கு வருகின்றன. இது போன்ற வழிமுறைகளை அந்தந்த காலத்தின் சூழலுக்கு ஏற்ப மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது.

குறிப்பாக, வீட்டுக்கு உட்புற தரை அமைப்பதில் ஆரம்பத்தில் சிமென்ட் கலவை மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் இதற்கு மாற்றாக ரெட் ஆக்சைட் பொருட்கள் கலந்து தரை அமைப்பது பிரபலமானதால் மக்கள் அதை பயன்படுத்தினர்.

இதற்கு அடுத்தபடியாக மொசைக் கற்கள் தயாரித்து வீட்டுக்கான தரை அமைக்கும் பழக்கம் பிரபலமானது. இந்த வகை தரைகளை பராமரிப்பதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்ட நிலையில் இதற்கு மாற்று தேடும் நிலைக்கு மக்கள் சென்றனர்.

இந்த வகையில் செராமிக் பொருளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பதிகற்கள் பிரபலமாகின. இதை பயன்படுத்தி அமைக்கப்படும் தரை மிகவும் பளபளப்பாக காணப்படுகிறது என்பதுடன் பயன்படுத்தவும் எளிதாக இருந்தது என்பது கூடுதல் சிறப்பு.

இந்நிலையில் பதிகற்களுக்கு போட்டியாக பல்வேறு புதிய வழிமுறைகள் தரை அமைப்பதற்கு அறிமுகமாகி உள்ளன. இதன்படி நுண்ணிய பொடி ஜல்லிகளில் ரெசின் என்ற பொருளை சேர்த்து தரை அமைக்கும் பழக்கம் தற்போது பிரபலமாகி உள்ளது.

'ஸ்டோன் கார்பெட்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வழிமுறையில், 2 முதல், 6 மி.மீ., அளவுள்ள பொடி ஜல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன. முறையாக தரம் பிரிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்ட ஜல்லியுடன் ரெசினை தேவையான அளவுக்கு சேர்த்து தரை அமைப்பதே இதற்கான வழிமுறையாகும்.

பதிகற்களுக்கு இணையான பளபளப்பு மற்றும் பினிஷிங் இதில் கிடைக்கும் என்பதால் இந்த வகை தரைகளை அமைக்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். பதிகற்கள் அமைப்பதில் ஆகும் செலவுக்கு சற்று குறைவாக தான் இதற்கு ஆகும் என்றாலும் பதிகற்களின் ஆயுளைவிட நீண்ட காலத்துக்கு இந்த வகை தரைகள் உழைக்கும்.

பதிகற்கள் போன்று பளபளப்பு இருந்தாலும், இந்த தரைகளில் வழுக்கும் தன்மை இருக்காது என்பது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. இந்த வகை தரைகள் அமைக்கும் போது அதில் கூடுதலாக பாலியூரித்தேன் போன்ற பொருட்கள் பயன்படுத்தப்படுவதால், நீர்க்கசிவு பிரச்னைகள் தடுக்கப்படும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.

டைல்ஸ் எனப்படும் பதிகற்களுக்கு இணையான பளபளப்பு மற்றும் பினிஷிங் இதில் கிடைக்கும் என்பதால் பெரும்பாலான மக்கள் 'ஸ்டோன் கார்பெட்' வகை தரையை அமைக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us