தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கனவு இல்லம்/ஆலோசனை/ கட்டடத்துக்கு முக்கியம் நிலத்துாண் அடிமானம் அசையா, அசையும் சுமையை பொறுத்து அமையும்

 கட்டடத்துக்கு முக்கியம் நிலத்துாண் அடிமானம் அசையா, அசையும் சுமையை பொறுத்து அமையும்

 கட்டடத்துக்கு முக்கியம் நிலத்துாண் அடிமானம் அசையா, அசையும் சுமையை பொறுத்து அமையும்


ADDED : ஜன 17, 2026 05:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 17, 2026 05:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சி றிய கட்டடமானாலும், பெரிய கட்டடமானாலும் அதன் செயல்பாடுகளும், ஆயுளும் கட்டடத்தின் அடித்தளம் மற்றும் இயற்கையாக அமைந்துள்ள மண்ணின் தன்மையை பொறுத்தது. பொதுவாக நல்ல தாங்கும் திறன் கொண்ட மண் இருக்கும் பட்சத்தில் 1.5மீ., (5 அடி) அடித்தளம் அமைக்கப்படுகிறது.

குறைந்த ஆழத்தில் தாங்கும் திறன் உள்ள மண் இயற்கையாக அமையாத பட்சத்தில் அடித்தளத்தை மிகவும் ஆழமாக அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்த ஆழம் என்பது 3 மீ.,(10 அடி) முதல் 10, 15, 20 மீ.,(32, 48, 64 அடி) ஆழம் வரை செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது.

கல் குவாரி தோண்டிய இடங்கள், கிணறுகள் போன்ற பள்ளங்கள் பல்வேறு கலப்புடைய திடக்கழிவு மற்றும் கரிம மண்ணால் வெவ்வேறு காலங்களில் நிரப்பப்பட்டிருக்கும். சில இடங்களில் நீர் மட்டம், தரைக்கு அருகாமையில் இருக்கக்கூடிய சூழ்நிலைகளும் உண்டு.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆழமான அஸ்திவாரம் அமைப்பது முக்கியம் என்கிறார், கோவை அரசு தொழில்நுட்ப கல்லுாரியின் முன்னாள் மண் தொழில்நுட்ப துறைத்தலைவர் அருமைராஜ்.

அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டதாவது...

ஆழமான அடித்தளம் அமைக்கும் பட்சத்தில் நிலத்துாண் அடிமானம் போடுவது செலவு குறைந்த, எளிதான முறையில் விரைவில் அமைக்கக்கூடிய முறையாகும். இது நிலத்துாண் அடித்தளம் கான்கிரீட், ஸ்டீல் மற்றும் மரத்தினால் அமைக்கப்படக்கூடியது.

குறிப்பாக, உலக புகழ்பெற்ற தாஜ்மஹால் அடித்தளம் 'பண்டில் ஆப் டிம்பர்' எனும் மரக்கட்டினால் ஆனது. இந்த நிலத்துாண் அடித்தளம் எப்பொழுது தண்ணீரில் மூழ்கி இருக்கும் பட்சத்தில், அதற்கு எந்த சேதமும் ஏற்படாது. இவ்வகையான அடித்தளம் மலைப்பிரதேசங்களிலும் அதிகம் காணப்படுகிறது.

மரங்கள் அழிவதை தடுக்கும் பொருட்டு, இவ்வகையான அடித்தளம் இந்த காலங்களில் பயன்படுத்தப்படுவதில்லை. தற்போது கான்கிரீட் நிலத்துாண் அடிமானம் அமைக்கப்பட்டு வருகிறது. இது இரண்டு வகையாக, முன்வார்ப்பு கான்கிரீட் மற்றும் களவார்ப்பு கான்கிரீட் ஆக செயல்படுத்தப்படுகிறது.

முன்வார்ப்பு கான்கிரீட் சுத்தியல் ஆற்றல் வாயிலாக மண்ணுக்குள் செலுத்தப்படுகிறது. அதிகமான நீளம் தேவைப்படும்போது பல துண்டுகளாக ஒன்றன்பின் ஒன்றாக இணைக்கப்படுகிறது. இந்த அடித்தளம் அமைக்கும் முறை துரிதமாக வேலையை முடிக்க உதவுகிறது. மிகவும் மென்மையான மண்ணில் இம்முறை பயன்பாட்டில் உள்ளது.

இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us