/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
'இடத்தின் மதிப்பு உயரும்; கட்டட மதிப்பு குறையும்'
/
'இடத்தின் மதிப்பு உயரும்; கட்டட மதிப்பு குறையும்'
'இடத்தின் மதிப்பு உயரும்; கட்டட மதிப்பு குறையும்'
'இடத்தின் மதிப்பு உயரும்; கட்டட மதிப்பு குறையும்'
ADDED : நவ 14, 2025 09:35 PM

திருப்பூர்: -ஜெயலட்சுமி: தாங்கள் சொல்லும் மனை நன்கு அமைந்துள்ளது. காலப்போக்கில் மதிப்பு அதிகமாகக்கூடிய ஒரு இடம். 1,800+1800 சதுரடி கட்டடம் உள்ளதாக சொல்கிறீர்கள். இரண்டிலும் வாடகையாக எவ்வளது தொகை வருகிறது என்று குறிப்பிடவில்லை. எனினும் தோராயமாக வாடகையை எடுத்துக்கொண்டு பார்த்தால், அதன் மதிப்பு ரூ.85 லட்சம் என மதிப்பிடலாம்.
மலுமிச்சம்பட்டி சந்திப்பில் இருந்து: -பரமேஸ்வரன்: சமயோஜிதமாக முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து, நிலத்தை வரன்முறைப்படுத்தியது சிறப்பு. தொழிற்சாலைகள் பெருகிவரும் நிலையில், குடியிருப்புகளுக்கு தேவை அதிகமாகிக்கொண்டேதான் இருக்கும். நான்கு பகுதி வீடுகளாக கட்டி, வாடகைக்கு விடும் பட்சத்தில் ஒரு சென்ட் இடத்தின் மதிப்பு ரூ.6 லட்சம் என கணக்கிடலாம்.
நீலாம்பூர் டெக்கத்லான் அருகே அவிநாசி மெயின் ரோட்டில் இருந்து: -கார்த்திக்: இடத்தின் மதிப்பு ஆண்டுக்கு ஐந்துசவீதம் உயர்ந்துகொண்டே போகும். ஆனால், கட்டடத்தின் மதிப்பு குறைந்துகொண்டே இருக்கும். நீங்களே கணக்கு செய்து பாருங்கள். எங்கள் அபிப்ராயத்தில் ரூ.45 லட்சம் மதிப்புள்ள பிளாட்டிற்கு, ரூ.15 ஆயிரம் வாடகை என்பது நல்ல வாடகை. எனவே, இன்னும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் காத்திருக்கலாம்.
--தகவல்:: ஆர்.எம். மயிலேறு: கன்சல்டிங் இன்ஜினியர்.:

