/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
கட்டடங்களில் ஜிப்சம் பூச்சு வேலையில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
/
கட்டடங்களில் ஜிப்சம் பூச்சு வேலையில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
கட்டடங்களில் ஜிப்சம் பூச்சு வேலையில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
கட்டடங்களில் ஜிப்சம் பூச்சு வேலையில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
ADDED : நவ 25, 2024 09:15 AM
புதிதாக வீடு கட்டும் போது அதில் ஒவ்வொரு பாகமும் உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கிறோம்.
இதில் அஸ்திவாரம் அமைப்பது முதல் மேல் தளம் வரையிலான கான்கிரீட் கட்டுமானங்களை உருவாக்குவது தான் பிரதான பணி என்று பலரும் நினைக்கின்றனர்.
குறிப்பாக, தரமான கம்பிகளை தேர்வு செய்து, அதை உள்ளீடாக வைத்து கான்கிரீட் கலவை கொட்டுவது தான் சரியான வழிமுறை என்று மக்கள் நினைக்கின்றனர்.
இதில், அடிப்படை கட்டுமானங்கள் நீங்கள் எதிர்பார்த்த உறுதியுடன் நீண்ட காலம் நிலைத்து நிற்க வேண்டும் என்றால், அதற்கு சரியான முறையில் பூச்சு வேலை செய்ய வேண்டும்.
இதில் ஆற்று மணலை சலித்து அதனுடன் உரிய அளவில் சிமென்ட் கலந்து பூச்சு வேலைக்கு பயன்படுத்துவதே இதுவரை இருந்து வந்த நடைமுறை. 'எம் சாண்ட்' வந்த நிலையில் அதை பூச்சு வேலைக்கு பயன்படுத்த வேண்டாம் என்று பலரும் நினைத்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில், பூச்சு வேலைக்கு என்று, அதற்கு ஏற்ற வகையில் முறையாக சுத்தப்படுத்தப்பட்ட 'பி சாண்ட்' மூட்டைகளை எம் சாண்ட் நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன.
இத்துடன் ஒரு படி மேலாக, தற்போது ஜிப்சம் அடிப்படையிலான பூச்சு வேலைக்கான புதிய பொருட்கள் வந்துவிட்டன.
பெரிய கட்டுமான நிறுவனங்கள் அடுக்குமாடி கட்டடங்களில் மட்டுமே பயன்படுத்தி வந்த ஜிப்சம் பிளாஸ்டர் கலவையை தற்போது சாதாரண கட்டடங்களுக்கும் மக்கள் பயன்படுத்த முன்வந்துள்ளனர்.
இது போன்ற ஜிப்சம் கலவையை பயன்படுத்துவதில் சில விஷயங்களில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
வழக்கமான சிமென்ட் அடிப்படையிலான பூச்சு வேலைக்கு 1 லட்சம் ரூபாய் செலவாகும் இடத்தில் ஜிப்சம் பிளாஸ்டரை பயன்படுத்தும் போது, 70,000 ரூபாயில் முடிந்துவிடுகிறது.
இருப்பினும், ஒரு கட்டடத்தில் எந்தெந்த இடங்களில் இந்த பிளாஸ்டரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதில் தெளிவுடன் செயல்பட வேண்டும். பொதுவாக சுவர்களில், 8 முதல் 10 மி.மீ., தடிமனுக்கு மேற்பூச்சு பூச வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், ஜிப்சம் பிளாஸ்டர் போன்ற பொருட்களை பயன்படுத்தும் போது இந்த தேவை, 3 மி.மீ., ஆக குறைவதால் சுவர்களில் தேவையில்லாத சுமை கூடுவது தவிர்க்கப்படுகிறது.
கட்டடத்தின் மேற்கூரையின் உட்புற பகுதிகள் உள்ளிட்ட சில இடங்களில், ஜிப்சம் பிளாஸ்டரை நேரடியாக பயன்படுத்தும் போது சில பிரச்னைகள் ஏற்படுகின்றன.
இதற்காக, 'நியூரோ பாண்ட்' எனப்படும் சில ரசாயனங்களை பயன்படுத்தினால் ஜிப்சம் பிளாஸ்டர் ஒட்டுவதில் பிரச்னை ஏற்படாது என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.