வீடு வாங்கும் போது பிளம்பிங் இணைப்பு விஷயங்களை கவனிக்க…...
வீடு வாங்கும் போது பிளம்பிங் இணைப்பு விஷயங்களை கவனிக்க…...
ADDED : பிப் 14, 2026 07:34 AM

சென்னை போன்ற நகரங்களில் அடுக்குமாடி திட்டங்களில் வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் தேடலில் ஈடுபடுகின்றனர். இதில் புதிய அடுக்குமாடி திட்டங்களில் வீடு பார்க்க செல்வோர், அதில் யு.டி.எஸ்., என்ன, வீட்டின் பரப்பளவு என்ன என்பது போன்ற விஷயங்களை பார்க்கின்றனர்.
இத்துடன் அந்த வீட்டில் வெளிச்சம், காற்றோட்டம் இருக்கிறதா, 24 மணி நேரமும் தண்ணீர் கிடைக்குமா, வாகனம் நிறுத்த இடம் போன்ற விஷயங்களை மக்கள் கவனிக்கின்றனவர். ஆனால், இந்த வசதிகள் இருக்கிறதா என்று மேலோட்டமாக பார்த்தால் மட்டும் போதாது.
இதற்கான பணிகள் என்னவாக செய்யப்பட்டுள்ளன என்பதையும் வீடு வாங்கும் முன் முழுமையாக விசாரிக்க வேண்டும். நீங்கள் வாங்குவதற்காக பார்க்கும் வீட்டில் செனறு குழாயை திறந்து பார்த்தால் தண்ணீர் வருகிறது என்பதுடன் அமைதியாகிவிட கூடாது.
அந்த வளாகத்தில் தண்ணீர் விநியோகத்துக்கு என்ன வசதி செய் யப்பட்டுள்ளது. போர்வெல் எங்கு எவ்வளவு ஆழத்துக்கு அமைக்கப்பட்டுள்ளது. மேல்நிலை தொட்டிகள் கொள்ளளவு என்ன, அதற்கான இணைப்பு வசதிகள் என்ன என்பதையும் விசாரிக்க வேண்டும்.
புதிய அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் மொத்த வீடுகள் எண்ணிக்கை, அதற்காக அமைக்கப்பட்ட போர்வெல்கள் எண்ணிக்கை, ஆழம் குறித்த விஷயங்களை விசாரிப்பது அவசியம். போர்வெல் அமைப்புகளில் இருந்து தண்ணீர் எப்படி பெறப்படுகிறது, அதற்காக கீழ் நிலை தொட்டி உள்ளதா என்று பாருங்கள்.
மேல்நிலை தொட்டியில் இருந்து வீடுகளுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பிளம்பிங் இணைப்புகள் நிலை குறித்தும் பார்க்க வேண்டும். மேல் நிலை தொட்டியை நிரப்புவதற்கான ஏற்பாடுகள் என்ன என்பது உள்ளிட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும
பெரும்பாலான கட்டடங்களில் மேல்நிலை தொட்டியில் இருந்து வீடுகளுக்கு வழங்கப்படும் இணைப்புகள் முறையாக கொண்டு வரப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும். இதில், உங்களுக்கான வீட்டில் எந்தெந்த அறையில் தண்ணீர் பயன்பாடு இருக்குமோ அங்கு உரிய குழாய் இணைப்புகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
குளியலறை, சமையலறை ஆகியவற்றுக்கான குழாய் இணைப்புகள் எப்படி அமைக்கப்பட்டுள்ளது என்பதை சரியாக பாருங்கள். அத்துடன், வீடுகளில் வாஷிங் மெஷின் அமைப்பதற்கான வசதி எப்படி அமைந்துள்ளது என்பதையும் பாருங்கள்.
புதிதாக கட்டப்படும் வீடுகளில், வாட்டர் ஹீட்டர், வாஷிங் மெஷின், ஆர்.ஓ., வாட்டர் பியூரிபையர் ஆகியவற்றுக்கான குழாய் இணைப்புகள் இருக்கிறதா என்று கவனிக்க வேண்டியது அவசியம். இதில் உங்களுக்கான தேவை குறித்து பணி காலத்திலேயே தெரி வித்தால் அதை பூர்த்தி செய்ய முடியும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.
புதிதாக கட்டப்படும் வீடுகளில், வாட்டர் ஹீட்டர், வாஷிங் மெஷின், ஆர்.ஓ., வாட்டர் பியூரிபையர் ஆகியவற்றுக்கான குழாய் இணைப்புகள் இருக்கிறதா என்று கவனிக்க வேண்டியது அவசியம்.
