sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

கனவு இல்லம்

/

ஆலோசனை

/

இரண்டே ஆண்டுகளான மொட்டை மாடியில் விரிசல்: மழை நீர் கசிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் 'எபோக்சி'

/

இரண்டே ஆண்டுகளான மொட்டை மாடியில் விரிசல்: மழை நீர் கசிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் 'எபோக்சி'

இரண்டே ஆண்டுகளான மொட்டை மாடியில் விரிசல்: மழை நீர் கசிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் 'எபோக்சி'

இரண்டே ஆண்டுகளான மொட்டை மாடியில் விரிசல்: மழை நீர் கசிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் 'எபோக்சி'


ADDED : நவ 10, 2024 01:27 PM

Google News

ADDED : நவ 10, 2024 01:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீடு கட்டி இரண்டு ஆண்டுகள் தான் ஆகும் நிலையில் மொட்டை மாடி தரைதளத்தில் விரிசல் கண்டுள்ளது. இதற்கு தீர்வுகாண என்ன செய்ய வேண்டும்?

-செல்வராஜ், கோத்தகிரி.

புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களில் ஆரம்ப காலத்தில் சிறு விரிசல்கள் தோன்றுவதற்கு வாய்ப்புகள் உண்டு. மாடியில் 'வாட்டர் புரூப்பிங்' இல்லை என்றால் மழைநீர் தேங்கி அதனால் ஏற்படும் வெப்பம் மற்றும் ஈரப்பதத்தினால் விரிசல்கள் ஏற்படலாம். விரிசல் சிறிதளவு உள்ளதா அல்லது முழுவதும் பரவுகின்றதா என பார்க்க வேண்டும். மழை நேரத்தில் விரிசல் வழியே நீர் கசிகிறதா என்பதை கவனிப்பது அவசியம். அவ்வாறு கசிகிறது என்றால் உடனடியாக விரிசலின் அளவை ஆய்வு செய்வதற்கு முதலில் ஒரு பொறியாளரை அணுகுங்கள். அவர் விரிசலுக்கான காரணத்தையும், விரிசலின் நீளம் மற்றும் ஆழத்தை அளவிட்டு, அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் மதிப்பீடு செய்து தருவார். விரிசலின் அளவுக்கு ஏற்ப 'எபோக்சி' ஊசி வாயிலாக கலவை பொருட்களை பயன்படுத்தி விரிசல்களை சரிசெய்யலாம்.

'டைனமிக் பைல் டெஸ்டிங்' என்பார்கள். 'பைல் பவுண்டேசன்' முறையில் மண்ணை வெளியே எடுக்காமல் அழுத்துவதன் வாயிலாக பூமியினுள் செலுத்தும் முறை உண்டா. அதன் பெயர் என்ன?

-கனகராஜ், கோவை.

சுத்தியல் வாயிலாக பைல்களை நிலத்திற்குள் அழுத்துதல் கட்டுமான தளத்தில் மிகவும் பிரபலமான முறை. மேலும், இது கட்டடங்களின் அஸ்திவாரத்தை உறுதிப்படுத்துவதற்கான ஒரு தொழில்நுட்பமாகும். இதை பயன்படுத்தி அஸ்திவாரத்தை உறுதியானதாக மாற்றுகின்றனர். இந்த செயல்முறையில் வலிமையான உந்து சக்தியை கொண்ட ஹேமர் மூலமாக அடிப்பார்கள். இந்த முறையில் கடுமையான நில அதிர்வுகள் ஏற்படும். துாசி மாசு அதிகரிக்கும். இதனால், அருகில் உள்ள கட்டடங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம்.

தற்போது நான் அபார்ட்மென்ட் நான்காவது தளத்தில் வசித்து வருகிறேன். மேலே மொட்டை மாடி இருப்பதால் வெயில் காலத்தில் வீட்டினுள் அதிக உஷ்ணம் தெரிகிறது. இதனை கட்டுப்படுத்த ஏதேனும் வழிவகைகள் இருந்தால் தெரிவிக்கவும்.

-ஸ்ரீநிவாசன், கோவை.

கட்டடத்தின் மேற்கூரை மீது சுருக்கி நன்றாக அமைந்துள்ளதா என்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் முதலில் தரமான பொருட்கள் பயன்படுத்தி நன்றாக சுருக்கி போட வேண்டும். அதற்கு மேல் செம்மண் கொண்டு செய்யப்பட்ட ஓடுகளை பதிக்க வேண்டும். உஷ்ணத்தை குறைக்க உதவும் இந்த ஓடுகள் சந்தைகளில் மிக எளிதாக கிடைக்கின்றன. தென் தமிழகம் முழுவதும் இந்த ஓடுகளை பயன்படுத்தி வீட்டில் ஏற்படும் வெயிலின் தாக்கத்தை குறைக்கிறார்கள்.

என்னுடைய வீட்டு கட்டுமான பணிக்காக கம்பிகள் வாங்கி சில மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், கட்டட வேலை தொடங்க தாமதமாகிறது. கம்பிகள் மழையில் நனைந்து துரு பிடித்துவிட்டது. எங்கள் இன்ஜினியர் இந்த கம்பிகளை 'கொரோசன் டிரீட்மென்ட்' செய்து அஸ்திவாரத்துக்கு பயன்படுத்தலாம் என்கிறார். இதை பயன்படுத்தலாமா?

-பத்மாசோபனா, கோவை.

துருப்பிடித்த கம்பிகளின் வலிமை குறைந்திருக்க வாய்ப்புகள் உள்ளது. காலப்போக்கில் மேலும் துருப்பிடித்து, கம்பியின் வலிமை குறைந்து விடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 'கொரோசன் டிரீட்மென்ட்' செய்வதன் மூலம் கம்பிகளின் வெளிப்புறத்தில் உள்ள துருவை அகற்றி அதன்மீது 'ரஸ்ட் ரெசிஸ்டன்ஸ்' பொருட்களை பூசி பாதுகாக்கலாம். இது எதிர்காலத்தில் துரு மேலும் பரவாமல் தடுக்கும். அதற்கு மேலும் சந்தேகம் எனில் கம்பிகளின் வலிமையை பரிசோதித்து கொள்ளலாம். உங்கள் பொறியாளர் சொன்னது போல் கீழே அஸ்வாரத்திற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், துருவின் அளவை பொறுத்தே அது தீர்மானிக்கப்படுகிறது. அஸ்திவாரம் என்பது ஒரு கட்டடத்தின் மிக முக்கியமான பகுதி. இதில் எந்த சமரசமும் செய்யக்கூடாது.



- சத்தியமூர்த்தி, இணைச் செயலாளர்,

பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா (கோவை மையம்).






      Dinamalar
      Follow us