sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

கனவு இல்லம்

/

ஆலோசனை

/

கட்டுமானத்தில் இயந்திரங்களின் பயன்பாடு; பொறியாளர் 'அலர்ட்'

/

கட்டுமானத்தில் இயந்திரங்களின் பயன்பாடு; பொறியாளர் 'அலர்ட்'

கட்டுமானத்தில் இயந்திரங்களின் பயன்பாடு; பொறியாளர் 'அலர்ட்'

கட்டுமானத்தில் இயந்திரங்களின் பயன்பாடு; பொறியாளர் 'அலர்ட்'


ADDED : ஆக 29, 2025 10:11 PM

Google News

ADDED : ஆக 29, 2025 10:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ச மீபகாலமாக கட்டுமானத் துறையில் இயந்திரங்கள் பயன்படுத்தும்போது, கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து விவரிக்கிறார், கோவை மண்டல கட்டுமான பொறியாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்ஜெயப்பிரகாஷ்.

n பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு அஸ்திவாரம் தோண்டும் பொழுது, அருகாமையில் உள்ள சுற்றுச்சுவர் அல்லது கட்டடங்களின் அஸ்திவாரம் மற்றும் கட்டடத்தின் உறுதித்தன்மை ஆகியவை கவனத்தில் கொண்டு, பணிகளை தொடங்க வேண்டும்.

n சிறு இயந்திரங்களை பயன்படுத்தும் பொழுது, இயந்திரங்களை இயக்கும் நபர் அனுபவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும். அனுபவம் இல்லாத நபர்களுக்கு, குறைந்தபட்சம் ஒரு வாரம் பயிற்சி அளிக்க வேண்டும்.

n இயந்திரங்களுக்கு மின் இணைப்பு கொடுக்கும் முன்பு, ஒயர்களில் ஏதேனும் பழுது உள்ளதா என்பதை முழுமையாக சோதித்த பின்பே, வேலையை தொடங்க வேண்டும். தற்பொழுது உயரமான கட்டடங்களில் கிரேன் மற்றும் லிப்ட் பயன்பாடு பரவலாக உள்ளது.

n கிரேன் பயன்படுத்தும் பொழுது, அருகிலுள்ளமின் ஒயர்களில் படாமல் பார்த்து இயக்க வேண்டும். கிரேன் மற்றும் லிப்டுகளில் அனுமதிக்கப்பட்ட பாரத்தை மட்டுமே ஏற்ற வேண்டும். லிப்டுகளை முறையாக பராமரிக்க வேண்டும்.

n பழைய கட்டடங்களை இடிக்கும்பொழுது, முதலில் 'ஸ்லாப்' மற்றும் பீம்களை அகற்றிவிட்டு பிறகு சுவற்றை இடிக்க வேண்டும். இடிக்கும் வேலையை தொடங்கும் முன், உரிய சப்போர்ட் கொடுத்து விட்டு, தொடங்க வேண்டும்.

n இடிக்கும் பொழுது கீழே எந்த நபர்களும் வராமல் இருக்க, பாதுகாப்பு கயிறுகளை முறையாக கட்ட வேண்டும். இயந்திரங்களுடன் இணைக்கும் டூல்ஸ் பிளேடு மற்றும் ராடுகள் தரமானதாக இருக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us