/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
என்ன செய்யலாம்... என்ன செய்யக்கூடாது?
/
என்ன செய்யலாம்... என்ன செய்யக்கூடாது?
ADDED : நவ 01, 2025 12:30 AM

ந ம் வீடுகள் தான், மொத்த மின்சார நுகர்வில் முக்கிய பங்கை கொண்டுள்ளன. எனவே, சிறிய மாற்றங்கள்கூட பெரிய சேமிப்பையும், சுற்றுச்சூழல் நன்மையையும் உருவாக்கும் சக்தி கொண்டவை என்கிறார், 'கொஜினா' செயற்குழு உறுப்பினர் ராமராஜ்.
அவர் பகிர்ந்து கொண்டதாவது...
முதற்கட்டமாக அதிக வெயிலுள்ள பகுதி சாய்மானத்தை கணக்கிட்டு, வீட்டை சூரியனின் பாதையில் அமைக்கலாம். அதிக வெளிச்சம் பெற வேண்டிய இடங்களில் பெரிய ஜன்னல்கள், வெப்பம் பெரிதாக வரும் பகுதியில், குறைந்த ஜன்னல்களை அமைக்கலாம்.
கூரையில் பொருத்தப்படும் சோலார் பேனல்கள், வீட்டின் மின்பங்கை குறைக்கின்றன. பேனல்கள், இன்வெர்ட்டர், மவுன்டிங், கட்டுப்பாட்டு முறை, பேட்டரி உள்ளிட்டவற்றை மின் தேவைக்கேற்ப கணக்கீட்டில் எடுத்துக்கொள்ளலாம். மின் தேவை, இடம் ஆகியவற்றை பொறுத்து சோலார் அமைப்பு மாறுபடும். அதேசமயம், சோலார் கட்டமைப்பை கண்காணித்து பராமரிக்க வேண்டியது அவசியம். இதனால், மின்சாரம் தடையின்றி கிடைக்கும். வாரம் அல்லது மாதம் ஒருமுறை சோலார் பேனல்களை சுத்தம் செய்யலாம்.
மின்சார பயன்பாடு மற்றும் சேமிப்பு தரவு, மாதம்தோறும் மதிப்பாய்வு செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில், அமைப்பின் செயல்திறன் மேம்படுத்தப்படுகிறது. வீட்டில் ஜன்னல்கள் மற்றும் வெப்பநிலைக் கட்டுப்பாடு, இன்வெர்ட்டர் மற்றும் பேட்டரி திறன் ஆகியவற்றை சோதித்தும், கணக்கிடப்படுவதும் அவசியம்.
கண்காணிப்பு, பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றினால், சோலார் மின்சாரத்தால் பெரும் பயனடைய முடியும்.
தொழில்நுட்பமும் வாழ்க்கையும் ஒருங்கிணைந்தது. மின்சாரம் சேமிக்கும் வீடு என்பது ஒரு சோலார் அமைப்பு அல்ல; இது வசதியும், தொழில்நுட்பமும் இணைந்த வாழ்விடம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

