/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
வீட்டின் வெளிப்புற பூச்சு சிதிலமடைய காரணம் என்ன? பாதிப்புகளை தவிர்க்க பொறியாளர்கள் விளக்கம்
/
வீட்டின் வெளிப்புற பூச்சு சிதிலமடைய காரணம் என்ன? பாதிப்புகளை தவிர்க்க பொறியாளர்கள் விளக்கம்
வீட்டின் வெளிப்புற பூச்சு சிதிலமடைய காரணம் என்ன? பாதிப்புகளை தவிர்க்க பொறியாளர்கள் விளக்கம்
வீட்டின் வெளிப்புற பூச்சு சிதிலமடைய காரணம் என்ன? பாதிப்புகளை தவிர்க்க பொறியாளர்கள் விளக்கம்
ADDED : அக் 25, 2025 12:11 AM

எங்கள் வீடு, 15 ஆண்டு கால ஆயுள் கொண்டுள்ளது. வீட்டின் வெளிப்புற மற்றும் உட்புற சுவர்கள், அதிக நீர்க்கசிவால் சிதிலமடைந்து உள்ளன. தகுந்த ஆலோசனை கூறவும்.
-கவிராஜ்: சுவர்களின் நீர்க்கசிவுக்கும், பூச்சுகள் சிதிலமடைவதற்கும் முக்கிய காரணம், நீரின் மேல் நோக்கு ஊடுருவல். நீரின் உட்புகும் தன்மையை குறைப்பதன் வாயிலாக, வெளிப்புறத்தில் உள்ள பூச்சுகளை சிறந்த முறையில் 'வாட்டர் புரூபிங்' செய்து, கட்டடத்தின் நீர் கசிவை சரி செய்ய முடியும்.
நான் புதிதாக கட்டும் வீட்டில்கேட் பொருத்த உள்ளோம். அதற்கு கண்டிப்பாக பில்லர் தேவையா?
-ராஜா: தாங்கள் கேட்டின் அகலம் எவ்வளவு அடி எனக் குறிப்பிடவில்லை. இருப்பினும், கேட்டின் அகலம்?
-ராஜ்குமார்: குளியல் அறை கதவு அமைப்பதில் பி.வி.சி., அல்லது யு.பி.வி.சி., என இரண்டிலும் அமைக்கலாம். மரத்தினாலான கதவு அமைக்கும் பொழுது, உட்புறம் பி.வி.சி., சீட் ஒட்டி பயன்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் மரம் நீரினால் பாதிக்கப்படாது. பி.வி.சி., மற்றும் யு.பி.வி.சி., கதவுகள் அமைக்கும் பொழுது, நீர் பட்டாலும் கதவுகள் பாதிக்கப்படாது.
நாங்கள் கட்ட இருக்கும் வீட்டில், 'செப்டிக் டேங்க்' மற்றும் நீர்த்தொட்டி அருகருகே வருகிறது. இதனால் ஏதாவது பிரச்னைகள் வருமா? அப்படி இருந்தால் அதை எவ்வாறு சரி செய்வது?
-அசோக் குமார்: நீர்த்தொட்டி கட்டும் பொழுது, கான்கிரீட் சுவர்களால் அமைத்துக்கொண்டால் வெளிப்புற நீர் உட்புகாமல் இருக்கும். 'செப்டிக் டேங்க்' அமைக்கும் பொழுது, கருங்கல் சுவர்களால் கட்டி பின்னர் அதன் நீரை, 'சோக்பிட்' அமைத்து வெளியேற்ற வேண்டும்.
எங்கள் கட்டடத்தில் எலக்ட்ரிக்கல் சுவிட்சுகள் மற்றும் சில உபகரணங்கள் தொட்டால் 'ஷாக்' அடிக்கின்றன; இது எதனால்?
-ஜாபர்: கட்டடத்திற்கு முறையான 'கிரவுண்ட் எர்த்திங்' செய்யப்பட்டுள்ளதா என்று, தகுந்த எலக்ட்ரீசியனை கொண்டு பரிசோதிக்கவும். மின் உபகரணங்களில் மின்சாரத்தை எடுத்துச் செல்லாத உலோக பாகங்களில் ஏற்படும், மின் கசிவை பாதுகாப்பாக எடுத்துச்சென்று பூமியில் கடத்தி விடுவதற்கான, ஜி.ஐ., அல்லது 'காப்பர் எர்த்திங்' அமைத்தும், தகுந்த 'பேக் பில்லிங் காம்பவுண்ட்' அமைத்தும் இப்பிரச்னைக்கு தீர்வு காணலாம்.
-மணிகண்டன்: இணை செயலாளர்,
கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கம் (காட்சியா).

