/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
துாண்கள் எழுப்பும் பணியில் கம்பிகளை இணைப்பதில் கவனிக்க…
/
துாண்கள் எழுப்பும் பணியில் கம்பிகளை இணைப்பதில் கவனிக்க…
துாண்கள் எழுப்பும் பணியில் கம்பிகளை இணைப்பதில் கவனிக்க…
துாண்கள் எழுப்பும் பணியில் கம்பிகளை இணைப்பதில் கவனிக்க…
ADDED : செப் 27, 2025 01:41 AM

பொதுவாக கட்டடம் கட்டும் போது அதில் துாண் களுக்கான கட்டுமான பணியில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். துாண்கள் அமைப்பதில் எத்தகைய கம்பிகளை பயன்படுத்த வேண்டும் என்பதில் கட்டட அமைப்பியல் பொறியாளர் வழிகாட்டுதலை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.
கட்டுமான பணி களுக்கு வாங்கப்படும் டி.எம்.டி., கம்பிகளை எப்படி பயன்படுத்துவது என்பதிலும் மக்கள் கவனமாக செயல்பட வேண்டும். அஸ்திவாரத்துக்கான கம்பி கூடு அமைக்கும் போது அதன் உயரம் ஆறு அடி வரை இருக்கும்.
இதில் அஸ்திவார நிலையில் கான்கிரீட் போடும் பணிகள் முடித்த பின் அடுத் தடுத்த நிலையில் கம்பிகளை பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, ஒரு முறை கான்கிரீட் போடும் போது, 3 அடி உயரம் என்ற அளவில் பணிகளை மேற்கொள்வது நல் லது.
இந்நிலையில், கம்பிகளின் தொடர்ச்சியை உறுதி செய்ய கம்பிகளை இணைக்க வேண்டியது அவசியமாகிறது. கம்பிகளை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் பணிக்கு லேப்பிங் என்று கட்டுமான துறையில் குறிப்பிடப்படுகிறது.
கட்டுமான பணியில் கம்பிகளை இணைக்கும் லேப்பிங் பணியில் என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். குறிப்பாக, இதில் ஆரம்பத்தில் என்ன வகை கம்பியை பயன்படுத்துகிறோமோ அதே வகை தரத்தில் கம்பிகளை பயன்படுத்த வேண்டியது அவசியம்.