தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கனவு இல்லம்/ஆலோசனை/ ஆக்கிரமிப்பு கட்டடங்களை எப்போதுதான் இடிப்பது?

 ஆக்கிரமிப்பு கட்டடங்களை எப்போதுதான் இடிப்பது?

 ஆக்கிரமிப்பு கட்டடங்களை எப்போதுதான் இடிப்பது?


ADDED : ஜன 10, 2026 05:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2026 05:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: வாலாங்குளத்துக்கு ஸ்டேட் பாங்க் ரோட்டில் இருந்தும், பெரிய கடை வீதி, கூட்ஸ் ஷெட் ரோட்டில் இருந்தும் வாய்க்கால் வழியாக மழை நீர் வரும். லங்கா கார்னர் அருகே குளத்துக்குச் செல்லும் வாய்க்கால் கரையை ஆக்கிரமித்து, ஏராளமான கட்டடங்கள் கட்டப்பட்டு இருந்தன.

வாய்க்கால் அகலம் சுருங்கியிருந்தது. இப்பகுதி பர்மா செல் காலனி என்று அழைக்கப்படுகிறது. கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியது.

அப்பகுதியில் வசித்தவர்கள் பொருட்படுத்தவில்லை. டவுன்ஹால், உக்கடம் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, வாலாங்குளம் கரை வழியாக கோட்டைமேடு சென்று, உக்கடம் சென்றடைய வழித்தடம் ஏற்படுத்தப்பட்டது. அப்போது, ஆக்கிரமிப்பு கடைகள் இடிக்கப்பட்டன. ஆறு கட்டடங்கள் இடிக்கப்படாமல் இருக்கின்றன. வீட்டில் வசித்தவர்கள் காலி செய்து விட்டனர். வணிக ரீதியாக பயன்படுத்திய ஒரு கட்டடத்தில் ஆட்கள் இருக்கின்றனர்.

அக்கட்டடங்களை இடித்து அகற்றி, வாய்க்காலை துார்வாரி, கரையை பலப்படுத்தினால், லங்கா கார்னரில் மழை நீர் தேங்காமல் குளத்துக்கு நேரடியாகச் செல்லும்.

மாநகராட்சி கமிஷனர் சி வகுரு பிரபாகரனிடம் கேட்ட போது, ''பர்மா செல் காலனியில் விடுபட்ட கட்ட டங்களை இடிக்க விரை ந்து நடவடிககை எடுக்கப்படும்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us