தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கனவு இல்லம்/ஆலோசனை/ டைல்ஸ் ஒட்டும் முன் தண்ணீரில் ஊறவைப்பதேன்? பொறியாளர்கள் விளக்கம்

டைல்ஸ் ஒட்டும் முன் தண்ணீரில் ஊறவைப்பதேன்? பொறியாளர்கள் விளக்கம்

டைல்ஸ் ஒட்டும் முன் தண்ணீரில் ஊறவைப்பதேன்? பொறியாளர்கள் விளக்கம்


ADDED : செப் 27, 2025 12:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2025 12:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நான் புதிதாக கட்டிய வீட்டின் உட்புறத்தில் அதிக வெப்பமாக உள்ளது. இதை எப்படி சரி செய்வது?

-கார்த்தி, பேரூர்.

கூலிங் டைல்ஸ் கொண்டு வீட்டின் மாடியில், பயன்படுத்துவன் வாயிலாக வெப்பத்தை வீட்டின் உட்புறம் வராமல் தடுக்க சிறந்தது ஒன்றாகும். இது டெரசில் ஒட்டும் பொழுது, டைல்ஸின் இடைவெளியை, 3 மி.மீ., இடைவெளி விட்டு ஒட்டி, அந்த இடைவெளியை எபாக்ஸி எனும் பவுடரை கொண்டு நிரப்ப வேண்டும். நீர் உட்புகாமல் இருக்கவும், டைல்ஸ் பெயர்ந்து வராமல் இருக்கவும், இதுபோன்ற முறையில் ஒட்ட வேண்டும்.

எங்கள் வீட்டில் மொசைக் புளோரிங் போட்டு உள்ளோம். தற்போது டைல்ஸ் புளோரிங் ஆக மாற்ற உள்ளோம். அதற்கென, அதை உடைத்து புளோரிங் போடலாமா அல்லது மாற்று வழி இருந்தால் கூறவும்?

-வள்ளியம்மாள், ஈச்சனாரி.

மொசைக் புளோரிங்கை உடைத்து விட்டு போடலாம் அல்லது உடைக்காமல் அப்படியே அதன் மேல் பேஸ்ட் உபயோகித்து, டைல்ஸ் ஒட்டலாம். அப்படி ஒட்டும்போது, வீட்டில் உள்ள அனைத்து கதவுகளையும், அந்த கனத்திற்கு ஏற்றவாறு மாற்றி, மீண்டும் பொருத்தலாம். பழைய மொசைக் புளோரிங் லெவல் மட்டமாக இருக்கும் பட்சத்தில், இந்த முறையை பயன்படுத்தலாம். இவ்வாறு பயன்படுத்துவதற்கு மார்க்கெட்டில் பிரத்யேகமாக டைல்ஸ் பேஸ்டுகள் உள்ளன. அதை பயன்படுத்தி டைல்ஸ் ஒட்டலாம்.

எங்கள் வீட்டு மாடுலர் கிச்சன் சின்கில், கசிவு ஏற்பட்டு பிளைவுட் பழுதாகிவிட்டது; அதை எவ்வாறு சரி செய்வது?

-குமாரசாமி, அன்னுார்.

சின்க் ஏரியாவில் நீர்க்கசிவு இருப்பின், முதலில் அதை எபாக்ஸி கொண்டு சரி செய்ய வேண்டும். பிறகு அந்த இடத்தில் உள்ள பிளைவுட்டை அகற்றிவிட்டு, புதிய பிளைவுட் பொருத்தி சரி செய்யலாம். பிளைவுட் தேர்வு செய்யும் பொழுது வாட்டர் புரூப் பிளைவுட் கொண்டு செய்தால் இப்பிரச்னை வராது.

நாங்கள் கட்டி வரும் வீட்டில் உள்ள பில்லர் கம்பி, கருப்பாக மாறி வருகிறது. சில கம்பிகளை சுற்றி பூஞ்சை பூத்தது போல் இருக்கிறது; இதற்கு காரணம் என்ன?

-விஸ்வநாதன், காரணம்பேட்டை.

நீங்கள் கட்டி வரும் வீட்டிலுள்ள நீரின் தன்மையை ஆராய்ந்து, அதன்பிறகு பயன்படுத்த வேண்டும். உப்பு அதிகம் உள்ள தண்ணீரை பயன்படுத்தி வரும் போது, இம்மாதிரியான பிரச்னைகள் வருவதற்கு சாத்தியம் உள்ளது. இதற்கென உள்ள ஆன்டி கரோஷன் பெயின்ட் மார்க்கெட்டில் கிடைக்கிறது. அதை பயன்படுத்தி, பெயின்ட் அடித்த பிறகு பயன்படுத்தலாம்.

பாத்ரூமில் டைல்ஸ் ஒட்டும் போது, தண்ணீரில் ஊற வைத்து தான் ஒட்ட வேண்டுமா?

-மகேஷ், செல்வபுரம்.

சிமென்ட் கொண்டு ஒட்டினால், கண்டிப்பாக ஊற வைத்துதான் ஒட்ட வேண்டும். அப்போதுதான் டைல்ஸ் நன்றாக ஒட்டும். தற்பொழுது மார்க்கெட்டில் டைல்ஸ் ஒட்டுவதற்கென்று, பிரத்யேக டைல்ஸ் பேஸ்ட் கிடைக்கிறது. அவற்றைக் கொண்டு ஒட்டும்போது, டைல்ஸ் ஊற வைக்க வேண்டிய அவசியம் இருக்காது; நன்றாகவும் ஒட்டும்.

கவிராஜ்

இணை பொருளாளர், கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கம் (காட்சியா).

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us