/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
செய்திகள்
/
'கட்டடத்தின் குடிநீர் குழாய், மின்சார இணைப்புகள் பற்றிய வரைபடத்தை பத்திரமாக வைக்க வேண்டும்'
/
'கட்டடத்தின் குடிநீர் குழாய், மின்சார இணைப்புகள் பற்றிய வரைபடத்தை பத்திரமாக வைக்க வேண்டும்'
'கட்டடத்தின் குடிநீர் குழாய், மின்சார இணைப்புகள் பற்றிய வரைபடத்தை பத்திரமாக வைக்க வேண்டும்'
'கட்டடத்தின் குடிநீர் குழாய், மின்சார இணைப்புகள் பற்றிய வரைபடத்தை பத்திரமாக வைக்க வேண்டும்'
UPDATED : ஆக 24, 2024 10:33 AM
ADDED : ஆக 24, 2024 01:26 AM

''கட்டடத்தினுள் அமைக்கப்படும் மின்சாதனங்கள் அமைப்பு வரைபடம், சுவர், சீலிங்கில் உள்ள பைப்கள், பாக்ஸ் பற்றிய குறிப்புகளை, ஆவணமாக பத்திரப்படுத்த வேண்டும்,'' என்று அறிவுறுத்துகிறார், கொசினா முன்னாள் தலைவர் பாலமுருகன்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
ஒளி விளக்கு அமைப்பது என்பது, ஒரு இடத்தில் இருப்பது போல் மற்றொரு இடத்தில் அமையாது. அறையின் நீள, அகலம், உயரம், வர்ணம், உட்புற பொருட்கள், அலங்கார சாதனங்கள், பிற மற்ற பொருட்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும். ஜன்னல் அமைப்பு, வெளிப்புற இயற்கை வெளிச்சம் என பல்வேறு காரணங்கள் தான், ஒரு அறையில் அமைக்கப்படும் ஒளி விளக்கை தீர்மானிப்பதாகும்.
விளக்குகள் தேர்வு
ஒளி விளக்கு கண்களுக்கு பாதுகாப்பு அம்சமாக இருக்க வேண்டுமே தவிர, தொந்தரவு தரும்படி நிலைக்கு கொண்டு செல்லக்கூடாது என்கிற, நோக்கத்தில் தான் பல்புகளை அமைக்க வேண்டும்.
பல்புகள், சுவரில் அல்லது மேற்கூரை சீலிங்கில் அமைக்கும் போது, அறைகளில் அமர்ந்து படிக்கும் போதோ, எழுதும் போதோ, படிப்பவரின், எழுதுபவரின் நிழல் புத்தகத்தின் மீது பட கூடாதபடி தான் ஒளி விளக்கு பல்புகள் அமைக்க வேண்டும். நிழல் அமைந்தால், கண்களுக்கு அதிகமாக அழுத்தம் தேவைப்படும். 'வார்ம் லைட்டிங்' குடியிருப்பு இல்லத்துக்கு சிறந்தது.
மிகவும் முக்கியமாக, கட்டடத்தினுள் அமைக்கப்படும் மின்சாதனங்கள் அமைப்பு வரைபடம், சுவர், சீலிங்கில் உள்ள பைப்கள், பாக்ஸ்கள் பற்றி குறிப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த குறிப்பு வரைபடத்தை, ஒரு ஆவணமாக பத்திரப்படுத்த வேண்டும். பிற்காலத்தில் பராமரிப்பு, பழுது, மாற்றங்கள், திருத்தங்கள் என பல்வேறு பணிகளுக்கு, இந்த வரைபடம் உதவும்.
வரைபடம் முக்கியம்
புகைப்படம் எடுத்து பாதுகாப்பாக வைத்துக் கொள்வதால், மிக சுலபமாக எந்த பைப்கள், எந்த வகையில் செல்கிறது என அறிய முடியும்.
அறைகளை ஒரு காலத்தில் மாற்றம் செய்திடவோ, நீள அகலத்தை கூட்டவோ, குறைக்கவோ, நினைத்த சமயத்தில், இந்த வரைபடம் பலன் தருவதோடு, பாதுகாப்பும் தரும்.
அனைத்துக்கும் மேலாக, எர்த் அமைப்பதில் கூடுதல் கவனம் தேவை. மொத்த கட்டடத்தில், எவ்வளவு மின்சார பயன்பாடு இருக்கிறது, அதற்கு எவ்வளவு எர்த் தேவை என்கிற கணக்கீட்டை அறிந்து எர்த் அமைக்க வேண்டும். எர்த் அமைந்துள்ள பகுதி சுத்தமாக இருக்க வேண்டும் என்பது முக்கியம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

