/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
செய்திகள்
/
வங்கிக்கடன் பெறுபவர்கள் பெற வேண்டிய ஒரு முக்கிய காப்பீடு!
/
வங்கிக்கடன் பெறுபவர்கள் பெற வேண்டிய ஒரு முக்கிய காப்பீடு!
வங்கிக்கடன் பெறுபவர்கள் பெற வேண்டிய ஒரு முக்கிய காப்பீடு!
வங்கிக்கடன் பெறுபவர்கள் பெற வேண்டிய ஒரு முக்கிய காப்பீடு!
UPDATED : ஆக 17, 2024 10:59 AM
ADDED : ஆக 16, 2024 08:18 PM

'பிரத்யேகமான வீட்டு காப்பீட்டு திட்டங்களை, பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என அறிவுறுத்துகிறார், கோவை வக்கீல் வடவள்ளி நாகராஜன்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
கட்டட அனுமதி வரைபடத்தில் குறிப்பிட்டுள்ளவாறு, செட்பேக் (வீட்டை சுற்றி விடப்படும் இடம்) கட்டாயம் விட வேண்டும். வீட்டின் முன்புற சாலை அகலத்தை பொறுத்து, இது மாறுபடும்.
வீட்டின் உயரத்தை பொருத்தும், செட்பேக் அளவுகள் மாறுபடுகின்றன. டவுன் பிளானிங் விதிகளின் படி போதிய இடைவெளி விடாமலும், வாகன நிறுத்தத்திற்கு இடமில்லாமல், முழுவதுமாக வீட்டை கட்டுவதாலும், அதில் குடியேறும் உரிமையாளர்களோ அல்லது வாடகைதாரர்களோ தங்கள் வாகனங்களை ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்திக் கொள்கிறார்கள். இதனால், பொது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
ஆயுள் முழுவதும் அபராதம்
கட்டட அனுமதி வரைபடத்தில் குறிப்பிட்டுள்ளபடி, சதுரடி அளவுக்கு மேல் வீடு கட்டினாலோ, பக்க திறவிடம் விடாமல் கட்டினாலோ, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி துறையால் சொத்து வரி கணக்கிடப்படும் போது, வரியுடன் சேர்த்து அபராதமும் விதிக்கப்படுகிறது.
அதுவும் ஒருமுறை மட்டும் செலுத்தும்படியாக இல்லாமல், நாம் ஒவ்வொரு அரையாண்டு வரி செலுத்தும் போதும், சொத்து வரியுடன் சேர்த்து அபராதத்தையும், ஆயுள் முழுவதும் செலுத்த வேண்டிவரும். அது மட்டுமின்றி, மின் இணைப்பு பெறுவதற்காக, கட்டட நிறைவு சான்றிதழும் விதி மீறில் கட்டடங்களுக்கு வழங்கப்படுவதில்லை.
அவ்வாறான சூழ்நிலைகளில், கட்டுமானத்தின் போது பெற்ற தற்காலிக மின் இணைப்பையே பயன்படுத்த வேண்டியிருப்பதால், மின் கட்டணம் பல மடங்கு அதிகமாக செலுத்த வேண்டி வரும்.
2019ம் வருடத்தில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டட விதிகள் படி, கட்டுமானத்திற்காக பெறப்பட்ட தற்காலிக மின் இணைப்பையும், கட்டுமானம் முடிந்த பிறகு துண்டிக்க வேண்டும் என்ற விதி உள்ளதால், அதனையும் பயன்படுத்த இயலாது. இதனால், பெரும் சிரமங்களை சந்திக்க வேண்டி வருகிறது. எனவே, இதில் கவனம் தேவை.
காப்பீட்டு திட்டங்கள்
வீடு கட்ட கடன் பெறும் போது, பிரத்யேகமான வீட்டு காப்பீட்டு திட்டங்கள், சம்பந்தப்பட்ட வங்கியிலேயே உள்ளது. கடன் பெறும் வாடிக்கையாளர்கள் எதிர்பாராமல் இறந்து விட்டால், அவரின் சட்டப்படியான வாரிசுகளுக்கு மேற்படி கடனை திருப்பி செலுத்தும் பொறுப்பு வந்து விடுகிறது.
குடும்பத் தலைவர் இறப்பால், வாரிசுகளுக்கு கடன் சுமை செல்லக்கூடாது என்று கருதினால், காப்பீடு ஒன்றே நம் குடும்பத்திற்காக பாதுகாப்பானது. அதனையும், கடனாகவே சம்பந்தப்பட்ட வங்கிகள் வழங்குகின்றன. அதை கட்டாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஏற்கனவே, வங்கி கடன் பெற்று திரும்பி செலுத்தி வருபவர்களும், இத்திட்டத்தில் புதிதாக சேர்ந்து பயன் அடையலாம்.
இவ்வாறு, அவர் கூறினார். தொடர்புக்கு: 98422 50145.

