/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
செய்திகள்
/
துாண் அமைக்காமல் காம்பவுண்ட் சுவர் கட்டுவோர் சந்திக்கும் பாதிப்புகள் என்ன?
/
துாண் அமைக்காமல் காம்பவுண்ட் சுவர் கட்டுவோர் சந்திக்கும் பாதிப்புகள் என்ன?
துாண் அமைக்காமல் காம்பவுண்ட் சுவர் கட்டுவோர் சந்திக்கும் பாதிப்புகள் என்ன?
துாண் அமைக்காமல் காம்பவுண்ட் சுவர் கட்டுவோர் சந்திக்கும் பாதிப்புகள் என்ன?
ADDED : ஆக 31, 2024 11:17 AM

புதிதாக வீடு கட்டும் போது கட்டுமான தொழில்நுட்ப வழிமுறைகளை சரியாக புரிந்து செயல்படுத்த வேண்டியது அவசியம். இதில், கட்டுமான தொழில்நுட்பங்கள் குறித்த முறையான புரிதல் இன்றி சிலர் மேற்கொள்ளும் தவறுகளால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.
குறிப்பாக, ஒரு கட்டடம் கட்ட வேண்டும் என்றால் அதன் சுமையை தாங்கும் வகையில், நிலத்தில் உரிய ஆழத்தில் அஸ்திவார துாண்கள் அமைக்க வேண்டும். இந்த துாண்களை நிலத்துக்கு மேல் பகுதியில் இணைக்கும் வகையில் பீம்கள் அமைக்க வேண்டும்.
இதனால், கட்டடத்தின் மேல் பகுதியில் ஏற்படும் சுமை மொத்தமாக ஒரே இடத்தில் குவியாமல் பரவலாக்கப்பட்டு, துாண்களின் வழியே நிலத்துக்கு செல்லும். வீட்டுக்கான காம்பவுண்டு சுவர் அமைக்கும் போதும், 10 அடிக்கு ஒரு இடத்தில் துாண்கள் அமைக்க வேண்டும். தரையில் சிறிய அளவில் அஸ்திவாரம் அமைக்க வேண்டும். இந்த வழிமுறையை சரியாக கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் மக்கள் அலட்சியம் காட்டுகின்றனர்.
பீம்களை அடிப்படையாக வைத்து காம்பவுண்டு சுவர்களை எழுப்பினால் எவ்வித பிரச்னையும் ஏற்படாது என நினைக்கின்றனர். இதில் பெரும்பாலான மக்கள் பீம்களை இணைத்துவிட்டு, துாண்கள் இன்றி காம்பவுண்டு சுவர்களை எழுப்புகின்றனர். இவ்வாறு தனியாக பீம்கள், துாண்கள் அமைக்காமல் வழக்கத்தில் இல்லாத வழிமுறைகளை கடைப்பிடித்தால் அது பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். கட்டுமான தொழில்நுட்பத்தில் எந்த விதத்திலும் அங்கீகரிக்கப்படாத இது போன்ற வழிமுறைகளை பணியாளர்கள் சிலர் பரிந்துரைப்பதாக கூறப்படுகிறது. கட்டடத்தின் சுமை பரவல் குறித்து, கட்டட அமைப்பியல் பொறியாளர் வழிகாட்டுதல் இன்றி இது போன்ற செயல்களில் ஈடுபடாதீர்.
பிரதான கட்டடத்தின் துாண்களை இணைப்பதற்கான பீம்களை நீட்டித்து, அதன் மேல் காம்பவுண்டு சுவர் கட்டும் வேலை என்பது உறுதி தன்மையை கேள்விக்குறியாக்கும். வீட்டின் கட்டடம் வேறு, காம்பவுண்டுசுவர் வேறு என்ற அடிப்படை புரிதல் இன்றி கட்டடம் கட்டுவதில் குறுக்கு வழிகளை நாடாதீர் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.