/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
செய்திகள்
/
கட்டடம் அழகு பெற என்ன செய்யலாம்?
/
கட்டடம் அழகு பெற என்ன செய்யலாம்?
ADDED : மே 03, 2024 11:41 PM
ஒரு கட்டடத்தை எவ்வளவுதான் பார்த்து, பார்த்து கட்டினாலும் அதன் வெளிப்புறத்தோற்றம் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் வகையில் அமைந்திருக்க வேண்டும். அதற்கு தகுந்தாற்போல் கட்டடம் வடிவமைக்க வேண்டும்.
கட்டடத்தின் முன்பகுதியிலுள்ள உயரம், வெளிப்புற வடிவமைப்பிற்கு ஏற்ப திட்டமிடுவது அவசியம். கட்டடம் கட்டுபவரது, படைப்பாற்றலை காட்டிலும் கட்டடத்தை அழகுபடுத்துபவரின் திறமை அதீதமாக இருப்பது அவசியம் அப்போது கட்டடம் முழுமையான பொலிவை பெறும்.
கட்டடத்தின் உயரத்திற்கேற்ப, விளக்குகளை அமைக்க வேண்டும். முகப்பு விளக்குகளை பொருத்துவதற்கேற்ப வண்ணங்கள் பூசி ஓவியம் வரையலாம்.
பேனல் விளக்குகள், அலங்கார விளக்குகளை பொருத்தலாம். அப்போது கட்டடத்தின் வடிவமைப்பு மேலும் அழகு பெறும். இது போன்ற சிந்தனை மிக்க பணிகளால், எதிர்பாராத அளவில் கட்டடங்கள் கூடுதலாக அழகை பெறும்.