sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

கனவு இல்லம்

/

செய்திகள்

/

வீட்டு கான்கிரீட்டில் கம்பிகள் துருப்பிடிப்பது ஏன்?

/

வீட்டு கான்கிரீட்டில் கம்பிகள் துருப்பிடிப்பது ஏன்?

வீட்டு கான்கிரீட்டில் கம்பிகள் துருப்பிடிப்பது ஏன்?

வீட்டு கான்கிரீட்டில் கம்பிகள் துருப்பிடிப்பது ஏன்?


ADDED : செப் 13, 2024 11:40 PM

Google News

ADDED : செப் 13, 2024 11:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அஸ்திவாரம் தோண்டும்போது வரும் களிமண்ணை அகற்றினால் போதுமா, இல்லை மனை முழுவதும் உள்ள களிமண்ணை அகற்ற வேண்டுமா?

-பொன்னுச்சாமி, கீரணத்தம்.

அஸ்திவாரம் தோண்டும் போது, வரும் களிமண்ணை முழுமையாக அகற்றாமல் அதன் பண்புகளை, நவீன தொழில்நுட்பம் கொண்டு மேம்படுத்த முடியும். அதனால், மண் அகற்றும் செலவு குறையும். நீர் மற்றும் சுண்ணாம்பை, 4 முதல் 6 சதவீதம் பயன்படுத்தும் போது, மண்ணின் பண்புகளை மேம்படுத்தலாம். நீர், சுண்ணாம்பு மண்ணின் பண்புகளையும், அமைவிடத்தையும் பொறுத்து தேவையான நீர் சுண்ணாம்பை உகந்த அளவு பயன்படுத்த வேண்டும்.

கேன்டிலிவர் பால்கனியின் ஓரத்தில் 9” கனம் சுவர் எழுப்பலாமா?

-குமார், கணுவாய்.

சிறந்த பொறியாளரை கொண்டு, சரியான முறையில் கட்டட வடிவமைப்பு செய்த கேன்டிலிவர் பால்கனியில், 9 அகல சுவரை எழுப்பலாம்.

பாத்ரூமில் உள்ள வென்டிலேட்டரில் 'எக்சாஸ்ட் பேன்' வைத்துதான் கட்ட வேண்டுமா?

-ஜெய்சங்கர், இருகூர்.

கழிவறைகளில் வென்டிலேட்டர், மிகச் சிறிய அளவில் தான் இருக்கும். காற்றோட்டத்தை மேம்படுத்த வென்டிலேட்டரில் 'எக்சாஸ்ட் பேன்' அமைக்கும்போது, நல்ல காற்றோட்டம் ஏற்பட்டு கழிவறைகளில் துர்நாற்றம் வீசாது. சுகாதாரமாக இருக்கும்.

நான் புதிதாக கட்டிவரும் வீட்டுக்கு, கம்பி இணைப்புகளுக்கு 'ரீபார் கப்லர்' முறையை பயன்படுத்தலாம் என, பொறியாளர் கூறுகிறார். இது சரியான முறையா?

-குமாரசாமி, ஜி.வி.கார்டன்.

கட்டடத்தில் பயன்படும் கம்பிகளை, காலர் மற்றும் வெல்டிங் முறையில் நவீன தொழில்நுட்பத்துடன் இணைப்பது என்பது. 'ரீபார் காலர்' ஆகும்.

ரீபார் காலர் முறையில் இணைக்கும் போது, இணைப்பு மிக உறுதியானதாக இருக்கும். கம்பிகளுக்கிடையே நெரிசல் குறையும். கம்பிகளின் நீளத்தையும் சேமிக்க முடியும்.

என்னுடைய வீட்டின் முதல் தளத்தில், புதிதாக வீடு கட்ட உள்ளேன். ஏற்கனவே சுருக்கிதான் தளம் போட்டு உள்ளேன். தற்போது செங்கல் சுவர் கட்டும்போது மொத்த தளத்தையும் எடுத்துவிட வேண்டுமா, அல்லது சுவர்கள் வரும் இடத்தில் மட்டும் எடுத்தால் போதுமா?

-சரவணன், குறிச்சி.

கட்டடத்தின் மேல் பகுதியில் அமைத்துள்ள சுருக்கி, மழை நீர் வடியும் வகையில் சரிவானதாக இருக்கும். எனவே அவற்றை முழுமையாக அகற்றிவிட்டு, பின்னர் சுவர் வைக்கும் முறையே சிறந்தது. மேல் தளத்தில் கட்டடம் கட்டியதும், அகற்றிய சுருக்கியை மீண்டும் கட்டடத்தில் மேல் பகுதியில், உபயோகிக்கும் போது செலவு குறையும்.

எனது வீடு கட்டி, 17 ஆண்டுகள் ஆகின்றன. தற்பொழுது கான்கிரீட்டில் உள்ள இரும்பு கம்பிகள் துருப்பிடித்து கம்பியும், கான்கிரீட்டும் உதிர்ந்து வருகிறது; இது எதனால் ஏற்படுகிறது?

-பழனியப்பன், சுல்தான்பேட்டை.

கட்டடம் கட்டும்போது நீரின் தன்மையை பரிசோதித்து, சரியான நீரை கட்டடத்தில் பயன்படுத்தும் போதும், சரியான அளவில் கவர் பிளாக் பயன்படுத்தும் போதும், கட்டடம் உறுதியானதாகவும், பிற்காலத்தில் கட்டடத்தில் கம்பிகள் துருப்பிடிக்காமல், கான்கிரீட் உதிராமல் வலுவானதாகவும் இருக்கும்.

- பொறியாளர் விஜயகுமார், தலைவர்

கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியளர் சங்கம்(காட்சியா).






      Dinamalar
      Follow us