தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கனவு இல்லம்/செய்திகள்/ வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ஆவடி மாநகரம் 

 வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ஆவடி மாநகரம் 

 வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ஆவடி மாநகரம் 


ADDED : பிப் 21, 2026 08:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2026 08:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செ ன்னையை ஒட்டியுள்ள ஆவடி மாநகரம், பல்வேறு கட்டமைப்பு வசதிகளுடன், சென்னைக்கு இணையாக அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

ஆவடி மாநகரம் சென்னையிலிருந்து, 26 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரே மாநகராட்சி ஆவடிதான். புறநகர் பகுதிகளில் சென்னைக்கு நிகராக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நகரங்களில் ஆவடி முதன்மையானது.

ஆவடி மாநகரமானது பருத்திப்பட்டு, பாலேரிப்பட்டு, விளிஞ்சியம்பாக்கம், சேக்காடு, முத்தா புதுப்பேட்டை, தண்டரை, மிட்னமல்லி, கோவில்பதாகை உள்ளிட்ட கிராம பகுதிகளை ஒன்றிணைத்தது.

ஆவடி நகராட்சி, 2019 ஜூன் 17ல், தமிழகத்தின் 15வது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

ஆவடி மாநகராட்சி 65 சதுர கி.மீ., பரப்பளவு உடையது. அதில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது 30 சதவீத பகுதிகளில், மத்திய பாதுகாப்பு நிறுவனங்களான கனரக வாகன தொழிற்சாலை, படை உடை தொழிற்சாலை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், இன்ஜின் தொழிற்சாலை, இந்திய விமானப்படை, இந்திய உணவு பாதுகாப்பு கழகம் உள்ளிட்டவை அமைந்துள்ளன.

இதனால், தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வட மாநிலத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் மேற்படி நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இந்தியாவில், மத்திய அரசின் ராணுவ மற்றும் பாதுகாப்பு துறைகள் அதிகம் உள்ள ஒரே மாநகரம் ஆவடி.

ஆவடி மாநகராட்சி, நான்கு மண்டலங்கள், 48 வார்டுகளில், 4,526 தெருக்கள் உள்ளன. இங்கு, ஒரு லட்சத்து, 19,328 குடியிருப்புகளில், 5,63,341 மக்கள் வசித்து வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள அரசு கட்டடங்களில், 21 தளங்களுடன் கட்டப்பட்ட, 'டைடல் பார்க்' ஆவடி மாநகரத்துக்கு உட்பட்ட பட்டாபிராம் பகுதி யில் அமைந்துள்ளது. தவிர, ஆவடி அரசு மருத்துவமனை, 7,450 வணிக நிறுவனங்கள், 4 தினசரி சந்தைகள் அமைந்துள்ளன.

ஆவடி மாநகரத்தில், 9.0 கி.மீ., துாரம், திருமுல்லைவாயில், அண்ணனுார், ஆவடி, இந்து கல்லுாரி, பட்டாபிராம், பி.டி.எம்.எஸ்., மற்றும் பட்டாபிராம் இ -- டிப்போ என ஏழு ரயில் நிலையங்கள் உள்ளன.

ஆவடி ரயில் நிலையத்தில் மட்டும் தினமும் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர். மற்ற ரயில் நிலையங் களையும் சேர்த்து தினமும் 8 லட்சம் மக்கள் பயனடைந்து வருகின்றனர். ஆவடி ரயில் நிலையம், நகரத்தின் மைய பகுதியாக செயல்படுகிறது.

ஆவடி ரயில் நிலையத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில், ஆவடி பேருந்து நிலையம் உள்ளது. ஆவடியில் இருந்து கோயம்பேடு, திருவான்மியூர், செங்குன்றம், தாம் பரம், திருவள்ளூர், பெரியபாளையம் , ஆரணி, பூந்தமல்லி உள்ளிட்ட 55 வழித்தடங்களில், 221 பேருந்துகளில் தினமும் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

தவிர, செங்கோட்டை, துாத்துக்குடி, திருநெல் வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு பேருந்து கள் இயக்கப்படுகின்றன.

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை இணைக்கும் விதமாக, சென்னை -- திருத்தணி - ரேணிகுண்டா தேசிய நெடுஞ்சாலை உள்ளது. அதன் இரு மாவட்டங்களின் எல்லையாக ஆவடி மாநகரத்துக்கு உட்பட்ட பட்டாபிராம் அமைந்துள்ளது.

அதேபோல், பட்டாபிராம் பகுதியை ஒட்டி, 62 கி.மீ., வண்டலுார் -- மீஞ்சூர் வெளிவட்ட சாலையும் அமைந்துள்ளது.

ஆவடி மாநகராட்சியானபின், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும், மற்ற பகுதியில் இருந்து ஆவடியில் புதிதாக, 20, 000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடி வந்துள்ளன.

திருவேற்காடு, திருநின்றவூர், பூந்தமல்லி நகராட்சிகள் நெமிலிச்சேரி, நடுக்குத்தகை, பாலவேடு, சோராஞ்சேரி உள்ளிட்ட, 19 ஊராட்சிகளை ஆவடி மாநகராட்சியுடன் இணைக்க தமிழக அரசு திட்டமிட்டு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அதை கடந்த ஆண்டு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு உறுதி செய்துள்ளார்.

இவ்வாறு இணைத்தால் ஆவடி மாநகராட்சி பரப்பளவு, 188.51 சதுர கி.மீ., ஆகவும், மக்கள் தொகை, 9 லட்சத்திற்கும் மேல் உயரும். இதனால், கடந்த மூன்று ஆண்டு களாக ஆவடி சுற்று வட்டார பகுதிகளில், ரியல் எஸ்டேட் தொழில் வளர்ச்சி அடைந்து வருகிறது.

மேற்படி சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, சென்னை - திருத்தணி தேசிய நெடுஞ்சாலை, வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, விரைவில் துவங்கப்பட உள்ள கோயம்பேடு - ஆவடி மெட்ரோ ரயில் திட்டம், ஆவடி - ஸ்ரீபெரும்புதுார் - கூடுவாஞ்சேரி ரயில் திட் டம் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகள் இருப்பதால், ஆவடி மாநகரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us