sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

கனவு இல்லம்

/

செய்திகள்

/

நீங்கள் நினைப்பது போல் வீடு கட்டுவது கடினமே அல்ல: நம்பிக்கை தருகிறார் 'கொசினா' உறுப்பினர்

/

நீங்கள் நினைப்பது போல் வீடு கட்டுவது கடினமே அல்ல: நம்பிக்கை தருகிறார் 'கொசினா' உறுப்பினர்

நீங்கள் நினைப்பது போல் வீடு கட்டுவது கடினமே அல்ல: நம்பிக்கை தருகிறார் 'கொசினா' உறுப்பினர்

நீங்கள் நினைப்பது போல் வீடு கட்டுவது கடினமே அல்ல: நம்பிக்கை தருகிறார் 'கொசினா' உறுப்பினர்


ADDED : செப் 20, 2024 10:25 PM

Google News

ADDED : செப் 20, 2024 10:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எப்போது என்னென்ன தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதை மட்டும், நீங்கள் தெரிந்து கொண்டு விட்டால், வீட்டை கட்டுவது கடினமே இல்லை என்கிறார், 'கொசினா' உறுப்பினர் மாரிமுத்து.

அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது...

முதலில் கவனிக்க வேண்டியது, அறைகளின் தன்மை, அளவு மற்றும் அறைகள் அமைய வேண்டிய பகுதி, சாமான்கள், ஸ்டோரேஜ் மற்றும் இதர வசதிகளின் தேவைகள்.

வீட்டை கட்டிய பிறகு, சில ஆண்டுகளில் ஏதாவது மாற்றம் தேவைப்படுமா என்று குடும்பத்தினரிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

உட்படுத்த வேண்டிய முக்கிய அம்சங்களை, பட்டியலிட வேண்டும். இதன் மூலம் வீட்டை எந்த வடிவமைப்பில் திட்டமிடுவது என்பதில், ஓர் அடிப்படை கருத்து கிடைக்கும்.

இதையடுத்து, பட்ஜெட்டை திட்டமிட வேண்டும். உங்கள் கனவாக இருக்கும் வீட்டுக்கு, உங்களால் எவ்வளவு தொகை செலவழிக்க முடியும், அதற்காக ஒதுக்க முடிந்த மொத்த தொகை எவ்வளவு என்பதற்கு, தோராயமான ஒரு மதிப்பீட்டை செய்ய வேண்டும்.

நீங்கள் சேர்த்து வைத்துள்ளது எவ்வளவு, கடன்கள் மூலமாக எவ்வளவு கூடுதல் நிதி திரட்டலாம் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். நிலத்தின் விலை மற்றும் கட்டுமான செலவு என, இரண்டு முக்கிய தலைப்புகள் அல்லது செலவினங்களின் கீழ், மொத்த செலவையும் பிரித்துக்கொள்ளலாம்.

இதன் வாயிலாக, பட்ஜெட்டை தயாராக்கி விடலாம். வீடு கட்ட தயாராகும் முன், எடுக்கவேண்டிய முக்கிய தீர்மானம் ஒரு பிளாட்டை தேர்ந்தெடுப்பதே.

இது மிக முக்கியமான, வாழ்க்கையில் ஒரே ஒருமுறை மட்டுமே செய்யவேண்டிய தீர்மானம் என்பதால், இதில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் மற்றும் விமான நிலையம், பள்ளி, கல்லுாரி, மார்க்கெட், மருத்துவமனை, வேலை பார்க்கும் இடம் உள்ளிட்டவற்றில் இருந்து, வீட்டின் துாரத்தை கணக்கிட வேண்டும்.

நிலம் வாங்க பணம் கொடுக்கும் முன் விற்பவர், தரகர், ஏஜென்ட் எவராக இருந்தாலும் அவரது தகுதி பற்றி, சரியான தகவல்களை நன்கு விசாரித்து, அறிந்து கொள்வது மிக முக்கியம்.

விற்பவர் எவ்வித வில்லங்கமும் இல்லாமல், விற்பனை செய்ய அனுமதிக்கும் விதத்தில், விற்பவரிடம் 'கிளியர் டைட்டில் ஆப் ஓனர்ஷிப்' உள்ளதா என, பார்த்து உறுதி செய்துகொள்ள வேண்டும். இதற்கு, நிலத்துக்கு உடைமையான மற்றும் விற்பனைக்கான அனைத்து ஆவணங்களையும், உறுதிப்படுத்திக்கொள்ள ஒரு வக்கீலை நாடுவதுநல்லது.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us