/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
செய்திகள்
/
கழிப்பறை கட்டுவதில் ஏற்படும் குறைபாடுகள் நீர்க்கசிவுக்கு வழிவகுக்கும்!
/
கழிப்பறை கட்டுவதில் ஏற்படும் குறைபாடுகள் நீர்க்கசிவுக்கு வழிவகுக்கும்!
கழிப்பறை கட்டுவதில் ஏற்படும் குறைபாடுகள் நீர்க்கசிவுக்கு வழிவகுக்கும்!
கழிப்பறை கட்டுவதில் ஏற்படும் குறைபாடுகள் நீர்க்கசிவுக்கு வழிவகுக்கும்!
ADDED : ஜூன் 07, 2025 01:33 AM

நம்மில் பலருக்கும் புதிய கட்டடத்தில் எக்காரணம் கொண்டும் நீர்க்கசிவு போன்ற பாதிப்புகள் இருக்க கூடாது என்ற எண்ணம் இருக்கும். புதிதாக வீடு கட்டும் போது அதில் பயன்பாட்டு நிலையில் நீர்க்கசிவு ஏற்படும் வாய்ப்புள்ள இடங்கள் எவை என்பதை அறிந்து முறையாக செயல்பட வேண்டும்.
தரைதளம் மட்டும் கொண்டதாக வீடு கட்டும் போது, மேல் தளத்தில் இருந்து நீர்க்கசிவு ஏற்படாமல் தடுப்பதற்கான வழிமுறைகளில் கவனம் செலுத்த வேண்டும். ஆனால், அடுக்குமாடி கட்டடம் கட்டும் போது, ஒரு தளத்தின் மேற்கூரை என்பது இன்னொருதளத்தில் தரை பகுதியாக அமையும்.
இதில் தரைப் பகுதியில் தண்ணீர் வடிந்து செல்வதற்கான முறையான ஏற்பாடுகள் எப்படி செய்யப்படுகின்றனஎன்பதில் கவனமாக இருக்க வேண்டும்.குறிப்பாக, குளியலறை, கழிப்பறை, சமையலறை சிங்க் ஆகிய இடங்களில் தண்ணீர் வடிந்து வெளியில் செல்வதற்கான அமைப்புகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
அடுக்குமாடி கட்டடங்கள் கட்டும் போது, பெரும்பாலும், தரைதளத்தில் எங்கு கழிப்பறை அமைக்கப்படுகிறதோ அதன் வரிசையில் தான் மேல் தளத்திலும் கழிப்பறை அமைக்க வேண்டும். அனுபவம் வாயந்த பொறியாளர்கள் இந்த விஷயத்தில் தேவையில்லாமல் மாற்றம் செய்ய மாட்டார்கள்.
அடுக்குமாடி கட்டடங்களில் கழிப்பறை அமைக்கும் போது, அதற்கான தரை பகுதியில் நீர்க்கசிவு ஏற்படாமல் தடுப்பதற்கான வழிமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். கான்கிரீட் தளத்தில் மேல் கழிப்பறைக்கான கிளாசெட்களை அமைக்கும் நிலையில் கசிவு தடுப்பதற்கான வழிமுறைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
இதில், கிளாசெட் மற்றும் குழாய்களில் குறிப்பிட்ட அளவுக்கு தண்ணீர் எப்போது நிலுவையில் இருக்கும்என்பது அதன் அடிப்படை தன்மை. இவ்வாறு, குழாயில் குறிப்பிட்ட அளவு தண்ணீர், 24 மணி நேரமும் இருப்பில் இருக்கும் போது அதனால் கசிவு ஏற்படாமல் தடுப்பது சவாலான பணி தான்.
இந்த இடத்தில் அமைக்கப்படும் குழாய்களில் கசிவு ஏற்படாமல் தடுப்பதற்கான தரமான பொருட்களை பயன்படுத்த வேண்டியது அவசியம். குறிப்பாக, குழாய்களில் கசிவு ஏற்பட்டாலும், அந்த நீர் எந்த வகையிலும் உள் இறங்காத விதத்தில் கான்கிரீட் தளத்தில் உரிய தடுப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.
கழிப்பறை அமையும் இடத்தில் கான்கிரீட் தளம் அமைக்கும் போது, கம்பி கட்டுவதில் இருந்து, கலவை தயாரிப்பது, பூச்சு வேலை என அனைத்து நிலைகளிலும் கசிவு தடுப்பு மருந்துகளை பயன்படுத்த வேண்டியது அவசியம். இதில் நீர்க்கசிவு தடுப்புக்கான ரசாயனங்களை தேர்வு செய்து பயன்படுத்துவதும் நல்லது.
அடுக்குமாடி திட்டங்களில் வீடு வாங்கும் போது இதில் குறைபாடு இருப்பது தெரியாது. எனவே, இந்த இடத்தில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டது குறித்தும், நீர்கக்சிவு தடுப்பு அமைப்புகள் மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்தும் முறையாக விசாரிக்க வேண்டியது அவசியம் என்கின்றனர், கட்டுமான பொறியாளர்கள்.