sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

கனவு இல்லம்

/

செய்திகள்

/

எதிர்மறை தாக்கம் குறைக்கும் பசுமை கட்டுமானம்: சுகாதாரத்துடன் வாழ்வதற்கு சிறந்த 'அஸ்திவாரம்'

/

எதிர்மறை தாக்கம் குறைக்கும் பசுமை கட்டுமானம்: சுகாதாரத்துடன் வாழ்வதற்கு சிறந்த 'அஸ்திவாரம்'

எதிர்மறை தாக்கம் குறைக்கும் பசுமை கட்டுமானம்: சுகாதாரத்துடன் வாழ்வதற்கு சிறந்த 'அஸ்திவாரம்'

எதிர்மறை தாக்கம் குறைக்கும் பசுமை கட்டுமானம்: சுகாதாரத்துடன் வாழ்வதற்கு சிறந்த 'அஸ்திவாரம்'


ADDED : நவ 10, 2024 01:28 PM

Google News

ADDED : நவ 10, 2024 01:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மக்கள் தொகை பெருக்கத்துக்கேற்ப கட்டமைப்பு வசதிகளின் தேவை நாள் தோறும் கூடிக்கொண்டே செல்கிறது. இதனால், வளர்ச்சி என்ற போர்வையில் மரங்கள் வெட்டுதல், ஆறுகளில் மணல் எடுத்தல் போன்ற நடவடிக்கைகள் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தாக மாறிவருகின்றன.

இதற்கு சிறந்த உதாரணம் டெல்லி நகரத்தை எடுத்துக்கொள்ளலாம். புகை மாசுபாடு, ஆறுகளில் நுரை பொங்குதல் போன்ற பாதிப்புகள் அங்கு மக்களை சிரமங்களுக்கு ஆளாக்கி வருகின்றன. தற்போதைய சூழல், விலங்குகளையும், பறவைகளையும் விட்டு வைக்கவில்லை.

இலைகளையும், குச்சிகளையும் கூடுகட்ட பயன்படுத்திய பறவைகள் தற்போது பாலித்தீன் பைகளை சேகரம் செய்யும் அவலம் நம் முன்னே காணமுடிகிறது. இதுபோன்ற மாற்றங்கள் இயற்கை பேரழிவுக்கான மிகப்பெரிய அறிகுறி என்கிறார் 'பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா'(தமிழ்நாடு, புதுச்சேரி) பசுமை கட்டுமான கமிட்டி சேர்மன் சந்திரசேகர்.

அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டதாவது...

பசுமை கட்டுமானம் என்பது சுற்றுச்சூழலுக்கு உகந்தவாறு கட்டமைப்பது. இது நிலம், கட்டடம் கட்ட பயன்படுத்தும் பொருட்கள், மனித ஆற்றல் என்று துவங்குகிறது. மேலும், நிலத்தடி நீர் சேமிப்பு, தண்ணீரை மறுசுழற்சி செய்தல் போன்றவற்றை செயல்படுத்த வேண்டும். சூரிய மின் சக்தியை பயன்படுத்தலாம்.

பசுமை கட்டடம் என்பது எதிர்மறையான சுற்றுச்சூழல் தாக்கத்தை குறைக்கும். பசுமை கட்டடத்தில் வசிப்பவர்களுக்கு சுகாதார நலங்களுடன் இப்பதாக உலக சுகாதார அமைப்பின் ஆராய்ச்சி காட்டுகிறது.

கட்டடங்களில் தேவையான காற்று, சூரிய வெளிச்சம் இருப்பது அவசியம். தவிர, மரம், செடி என இயற்கை சூழலுடன் இணைந்து வசிப்பவர்களின் உளவியல், உடல் மற்றும் சமூக நல்வாழ்வு மேம்படுகிறது. பசுமை வீடுகள் கட்டுவதற்கு, பசுமை கட்டட சான்றிதழ், கவுன்சில் வரைமுறைகள் வழிகாட்டுகிறது.

'லீடர்ஷிப் இன் எனர்ஜி அண்ட் என்வைரான்மென்டல் டிசைன்' என்பது பரவலாக அங்கீகரிக்கப்பட்ட பசுமை கட்டட சான்றிதழ் அமைப்பு. கிரீன் ரேட்டிங் பார் இன்டிகிரேட்டெட் ஹேபிடட் அசெஸ்மென்ட், தி இண்டியன் கிரீன் பில்டிங் கவுன்சில், தி பியூரோ எனர்ஜி எபிசியன்சி ஆகியன இதற்கு வழிவகுக்கின்றன.

இந்தியாவில் பசுமை கட்டட சந்தை இன்னும் ஆரம்ப நிலையில் உள்ளது. 5 சதவீத சந்தையை கூட எட்டவில்லை. 2025ம் ஆண்டில் நாட்டில் பசுமை கட்டட சந்தையின் வியாபார மதிப்பு, 35-50 பில்லியன் டாலர் (ரூ.3.25 லட்சம் கோடி) வரை இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மத்திய, மாநில அரசுகள் பசுமை கட்டடம் கட்டுவதற்கு பல சலுகைகளை வழங்குகின்றன. மக்கள் தொகை அதிகரித்துள்ள இன்றைய சூழலில், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாமல் தொலைநோக்கு பார்வையுடன் பசுமை கட்டுமான முறைக்கு முக்கியத்துவம் தரவேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us