/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
செய்திகள்
/
பசுமை கட்டுமானமே பூமியை காக்கும் பெரிய 'பிரம்மாஸ்திரம்!'
/
பசுமை கட்டுமானமே பூமியை காக்கும் பெரிய 'பிரம்மாஸ்திரம்!'
பசுமை கட்டுமானமே பூமியை காக்கும் பெரிய 'பிரம்மாஸ்திரம்!'
பசுமை கட்டுமானமே பூமியை காக்கும் பெரிய 'பிரம்மாஸ்திரம்!'
ADDED : அக் 11, 2024 11:37 PM

மக்கள் தொகை பெருக்கம் உள்ளிட்ட காரணங்களால், குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதே சமயம், சுற்றுச்சூழலுக்கும் இதனால் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, பசுமை கட்டுமான முறைக்கு முக்கியத்துவம் தர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
உள்ளூரில் கிடைக்கும் பொருட்களை கொண்டு, உள்ளூர் சூழல்களுக்கு ஏற்ப, செலவு குறைவான, தரமான வீடுகளை கட்டும் முறையை பின்பற்றினால், சுற்றுச்சூழலும் காக்கப்படும்.
இப்போதே, பூமி வெப்பமயமாதல், இயற்கை வளங்கள் பற்றாக்குறை, அத்தியாவசிய தேவைகளுக்கு போராட்டம் போன்ற பாதிப்புகளை சந்திக்க துவங்கிவிட்டோம்.
இது குறித்து, 'கொசினா' உறுப்பினர் மாரிமுத்துராஜ் நம்மிடம் பகிர்ந்துகொண்டதாவது...
இனிமேலும் மனிதன் வனங்களை அழிக்காமல் இருக்க வேண்டும். மலைகளையும் உடைக்கக் கூடாது. நீர் நிலையை ஆக்கிரமிக்கக் கூடாது.
நிலம், நீர், காற்று மாசுபாடு இருக்கக்கூடாது. மனிதன் தன் வாழ்க்கை முறையில், சிறு மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.
பசுமை கட்டுமான முறையுடன், உயிரியியல் கட்டுமானங்களும் வளர வேண்டும். இயற்கையில் இருக்கும் வடிவங்களுக்கும், தொழில்நுட்பத்துக்கும் அளவே கிடையாது. அவற்றை கண்டுபிடித்து கட்டுமான துறையில் பின்பற்ற வேண்டிய கட்டாய காலத்தில் நாம் வாழ்கிறோம்.
மறுபயன்பாட்டிற்கு ஆட்படாத எதையும், இனி கட்டுமானத்தில் பயன்படுத்தக் கூடாது என சபதம் ஏற்க வேண்டும். கரையான் கட்டும் புற்று, பறவை, விலங்குகள் இருக்கும் வாழிடத்தை உற்றுநோக்கி தொழில்நுட்பத்தையும், கட்டுமான முறையையும் பயன்படுத்த வேண்டும்.
இயற்கையின் பிம்பம் கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்களால் அழிக்கப்பட்டு, வெப்பத்தின் தாக்கத்தில் உலகம் சுழன்று கொண்டு இருக்கிறது.
அதனால், அனைத்து உயிர்களுக்கும் பேரழிவு காத்துக்கொண்டிருக்கிறது. இதிலிருந்து தற்காத்துக்கொள்ள ஒரே வழி, இயற்கையுடன் இணைந்து வாழ்வதுதான்.
இயற்கையுடன் இரண்டர கலந்து வாழ்ந்த, சங்ககால மக்களின் வாழ்விட வடிவமைப்பு முறைகளை அஸ்திவாரம் கொண்டு, அதன்மேல் நவீன வடிவமைப்பு முறையை புகுத்தலாம்.
இயற்கையான ஒளி, ஒலி, நீர், மண் முதலியவற்றை மாசுபடுத்தாத முறையில், அதன் அளவற்ற ஆற்றலை பெருமளவு பயன்படுத்தும் வண்ணம், வாழ்விடத்தை வடிவமைக்க வேண்டும்.
தற்போது, கட்டுமான துறையில், மாற்று பொருட்களை நாட வேண்டிய கட்டாயம் உள்ளது. இயற்கையை காப்பாற்றிட, மணல் மற்றும் மரத்துக்கு மாற்றுப்பொருட்கள், சிமென்ட் இல்லாத மாற்றுமுறைகள் என தேர்வு செய்வது அவசியம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

