/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
செய்திகள்
/
மண்ணின் தாங்கும் திறனை கணக்கிடுவது எப்படி? சூத்திரம் சொல்லித்தருகிறார் பொறியியல் நிபுணர்
/
மண்ணின் தாங்கும் திறனை கணக்கிடுவது எப்படி? சூத்திரம் சொல்லித்தருகிறார் பொறியியல் நிபுணர்
மண்ணின் தாங்கும் திறனை கணக்கிடுவது எப்படி? சூத்திரம் சொல்லித்தருகிறார் பொறியியல் நிபுணர்
மண்ணின் தாங்கும் திறனை கணக்கிடுவது எப்படி? சூத்திரம் சொல்லித்தருகிறார் பொறியியல் நிபுணர்
ADDED : ஜன 11, 2025 09:07 AM

ஒரு கட்டடத்தின் அடித்தளம், சிறந்த முறையில் அமைக்கப்பட்டால் மட்டுமே கட்டடம் உறுதியுடனும், குறைபாடுகள் மற்றும் வெடிப்புகளின்றி, நீடித்த ஆயுளுடன் இருக்கும். மண்ணின் உறுதித்தன்மையை கள ஆய்வு செய்ய, பல உபகரணங்கள் பயன்படுத்துகிறோம்.
ஆனால், அந்த உபகரணங்கள் மூலம் பெறப்படும் குறியீட்டு எண்களை மிகவும் கவனமாக தொழில்நுட்ப அறிவியலோடு பயன்படுத்த வேண்டும் என்பதை, பலரும் அறிந்திருக்கும் வாய்ப்புகள் குறைவுதான் என்கிறார், கோவை அரசு தொழில்நுட்ப கல்லுாரி மண் தொழில்நுட்ப துறை முன்னாள் பேராசிரியர் அருமைராஜ்.
அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டதாவது...
மண் தொழில்நுட்ப ஆய்வுக்காக, 'ஸ்டேண்டர்டு பெனட்ரேஷன் டெஸ்ட்' மிக அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இப்பரிசோதனை மற்ற முறைகளை காட்டிலும் சுலபமானது; குறைந்த செலவுடையது. இந்த சோதனையின் வெளியீடான 'N' மதிப்பை கொண்டு, மண்ணின் தாங்கும் திறன் சூத்திரங்கள் மூலம் கணக்கிடப்படுகிறது.
இந்த 'N' குறியீடு மண்ணின் தன்மையை குறிக்கும் பண்புகள் அல்ல. இக்குறியீடானது(IS 2131-1981) 'ஸ்பிலிட் ஸ்பூன் சேம்பிளர்' கொண்டு மண்ணிற்குள், 30 செ.மீ., அளவுக்கு இறங்குவதற்கு, 63.8 கிலோ எடையுள்ள சுத்தியானது, 75 செ.மீ., கீழுள்ள அடைக்கல்லின் மீது எத்தனை முறை அடிக்கப்படுகிறது என்பதை குறிப்பது.
இந்த சோதனையானது, மணற்பாங்கான இடங்களில் மிகவும் நம்பிக்கையான குறியீட்டு முடிவுகளை தருகிறது. இந்த பரிசோதனை சுலபமாக இருப்பதால் அனைத்து வகை மண்ணிற்கும் நடத்தப்பட்டு இடைத்தொடர்பு மூலமாக, மண்ணின் தாங்கும்திறன் கணக்கிடப்படுகிறது.
மணற்பாங்கு அல்லாத மற்ற களிமண், கற்கள், பாறைகள் மீது நடத்தப்படும் பொழுது இந்த 'N' குறியீட்டு எண்ணை கையாளுவதில், மிகுந்த கவனம் தேவைப்படுகிறது. சுமை மற்றும் நனைத்தல் போன்ற திருத்தங்கள் செய்யப்பட்டு, அதன்பின் இந்த குறியீட்டு எண் பயன்படுத்தப்படுகிறது.
இந்த சோதனையில் பயன்படுத்தும் ஆற்றல் நிமித்தமாக, 'N' குறியீட்டு எண் மண்ணின் தன்மையை பொறுத்து மிகவும் வேறுபடுகிறது. இந்த ஆற்றல் நிமித்தமாக, செய்யப்படும் திருத்தங்கள் மூலம் பெறப்படும் மண்ணின் தாங்கும் திறன் சக்தி மட்டுமே, நம்பிக்கைக்குரிய வகையில் இருக்கும்.
இத்துறையில் தகுந்த நிபுணத்துவம் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் மூலமாக செய்யப்படும் பட்சத்தில், கட்டடத்தின் அடித்தளம் குறைந்த செலவிற்குள் உறுதியாக இருக்கும் வகையில் வடிவமைக்க முடியும்.
மண்ணின் தன்மை, அதன் தடிமன், கட்டடத்தின் சுமை, நீர் அட்டவணை மற்றும் பயன்படுத்தப்பட்ட ஆற்றலையும் ஒருங்கிணைத்து, பயன்படுத்தும்போது முடிவுகள் சிறந்ததாக அமையும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

