தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கனவு இல்லம்/செய்திகள்/ வீட்டுக்கு வலிமை தரும் 'இன்டர்லாக்கிங் பிளாக்'

 வீட்டுக்கு வலிமை தரும் 'இன்டர்லாக்கிங் பிளாக்'

 வீட்டுக்கு வலிமை தரும் 'இன்டர்லாக்கிங் பிளாக்'


ADDED : மார் 21, 2026 06:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2026 06:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இன்றைய காலத்தில் வீடு கட்டுவது பலருக்கும் வாழ்நாள் கனவாக உள்ளது. ஆனால், கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு, ஆட்கள் கூலி உயர்வு போன்ற காரணங்களால் வீடு கட்டும் செலவு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

இதற்கு மாற்றாக குறைந்த செலவில், குறைந்த நேரத்தில் வீடு கட்ட உதவும் ஒரு புதிய முறையாக 'இன்டர்லாக்கிங் பிளாக்' பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கற்கள் இயற்கை மண் மற்றும் சிறிய அளவு சிமென்ட் சேர்த்து அதிக அழுத்தத்தில் தயாரிக்கப்படுகின்றன.

'கொஜினா' செயற்குழு உறுப்பினர் சந்தோஷ்குமார் இது குறித்து கூறியதாவது:

இந்தக் கற்கள் ஒன்றுடன் ஒன்று பூட்டும் வடிவத்தில்(இன்டர்லாக்) இருப்பதால் சுவர் கட்டும் வேலை எளிதாகவும், வேகமாகவும் முடியும். இதன் முக்கிய சிறப்பு என்னவென்றால் அவை ஒன்றுடன் ஒன்று சரியாக பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

அதிக அளவு சிமென்ட் பயன்படுத்த வேண்டியதில்லை. சுவர் கட்டும் வேகம் அதிகரித்து கட்டுமான பணிகள் குறைந்த காலத்திலேயே முடியும். பொதுவாக பாரம்பரிய செங்கல் கட்டுமானத்தில் ஒவ்வொரு அடுக்கிலும் சிமென்ட் மற்றும் மணல் அதிகமாக பயன்படுத்த வேண்டியிருக்கும்.

ஆனால், இன்டர்லாக் முறையில் மொத்த கட்டுமான செலவில் நல்ல அளவு சேமிப்பு கிடைக்கும். இதற்கு அதிக தொழிலாளர்கள் தேவையில்லை. இந்த கற்கள் இயந்திரத்தில் அதிக அழுத்தத்தில் தயாரிக்கப்படுவதால் நல்ல வலிமை கொண்டதாக இருக்கும்.

ஒரே அளவில் தயாரிக்கப்படுவதால் சுவர் நேர்த்தியாகவும் உறுதியானதாகவும் அமையும். மண் அடிப்படையில் தயாரிக்கப்படும் இந்தக் கற்கள் இயற்கையாகவே வெப்பத்தை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை. இதனால் வீட்டுக்குள் வெப்பம் குறையும்.

அதேசமயம் இக்கற்கள் கட்டுமானத்தின்போது துல்லியம் முக்கியம். உயரமான கட்டடங்கள் அல்லது அதிக எடை வரும் கட்டுமானங்களில் சில நேரங்களில் பாரம்பரிய செங்கல் சுவர் அல்லது ஆர்.சி.சி., சுவர் பயன்படுத்துவது அவசியமாக இருக்கலாம்.

எனவே கட்டடத்தின் தன்மை மற்றும் பயன்பாட்டை கருத்தில் கொண்டு இந்த முறையை தேர்வு செய்ய வேண்டும்.

ஒருமுறை கதவு, ஜன்னல் மாற்றப்பட்ட பிறகு அதை மாற்றுவது கடினம். எனவே கட்டுமானத்திற்கு முன்பே சரியான திட்டமிடல் அவசியம்.

இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us