தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கனவு இல்லம்/செய்திகள்/ அஸ்திவார பணியை துவங்கும் போது நில அளவை அவசியமா?

 அஸ்திவார பணியை துவங்கும் போது நில அளவை அவசியமா?

 அஸ்திவார பணியை துவங்கும் போது நில அளவை அவசியமா?


ADDED : பிப் 07, 2026 08:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2026 08:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதிதாக வீடு கட்ட வேண்டும் என்று நினைப் பவர்கள், அதற்கான சரியான வழிமுறைகளை விபரம் அறிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ஒப்பந்ததாரரை தேர்வு செய்தோம், அவரிடம் பணியை ஒப்படைத்தோம் என்று உரிமையாளர்கள் ஒதுங்கிவிட கூடாது.

இதில் நிலத்தின் அளவு, தற்போதைய நிலவரம், அங்கு எத்தகைய வீடு கட்ட வேண்டும் என்ற விபரங்களை ஸ்டெச்சுரல் பொறியாளரிடம் தெரிவித்து ஆலோசனைகள் பெற வேண்டும். ஒரு நிலத்தில் எத்தகைய கட்டடம் கட்டலாம் என்பதை மேலோட்டமாக முடிவு செய்யக்கூடாது.

உங்கள் நிலத்தில் முதலில் மண் பரிசோதனை செய்து, அங்குள்ள மண் அடுக்கின் சுமை தாங்கும் திறன் என்ன என்று பார்க்க வேண்டும். செலவு மிச்சமாகும் என்று மண் பரிசோதனை போன்ற விஷயங்களை தவிர்க்கலாம் என ஒருபோதும் நினைக்காதீர்.

இதன் அடிப்படையில் ஸ்டெச்சுரல் எனப்படும் கட்டட அமைப்பியல் பொறியாளரை அணுகி வழிகாட்டுதல்கள் பெற வேண்டும். உங்கள் நிலத்தில் எந்தெந்த இடத்தில் அஸ்திவாரம் துாண்கள் அமைய வேண்டும் என்பதை குறிப்பிடும் முன், நிலத்தின் எல்லைகளை அளக்க வேண்டும்.

பட்டா மற்றும் நில அளவை வரைபடத்தின் அடிப்படையில் நிலத்தின் அளவு, நான்கு எல்லைகள், பக்க அளவுகள் ஆகிய விபரங்களை சரியாக பார்க்க வேண்டும். இதையடுத்து, நிலத்தின் மேற்பரப்பு சமமாக இருக்கிறதா, என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

நிலத்தின் நான்கு எல்லைகளை துல்லியமாக கணக்கிட்டு, அதற்கு ஏற்ற வகையில் அஸ்திவார பள்ளம் தோண்டும் இடத்தை குறிப்பிட வேண்டும். அஸ்திவார பள்ளம் தோண்டும் இடங்கள் நேர் கோட்டில் இருப்பதை நேரடியாக சென்று பார்த்து உறுதி செய்ய வேண்டும்.

நீங்கள் வாங்கிய நிலத்தின் அக்கம் பக்கத்தில் விவசாயம் நடந்து வரும் நிலையில், கட்டுமான பணியின் போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதில், அஸ்திவார பள்ளம் தோண்டினால் தண்ணீர் வர வாய்ப்புள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

நிலத்தின் எல்லைகளை அஸ்திவாரம் தோண்டும் முன் அளப்பது ஏன், அதற்கு இவ்வளவு செலவு தேவையா என்று கூட கேள்வி வரலாம். ஆனால் இந்த விஷயத்தில் மிக கவனமாக செயல்பட்டால் மட்டுமே நீங்கள் பாதுகாப்பான முறையில் அஸ்திவாரத்தை அமைக்க முடியும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.

நீங்கள் வாங்கிய நிலத்தின் அக்கம் பக்கத்தில் விவசாயம் நடந்து வரும் நிலையில், கட்டுமான பணியின் போது, அஸ்திவார பள்ளம் தோண்டினால் தண்ணீர் வர வாய்ப்புள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us