ADDED : ஜூன் 20, 2025 11:33 PM
பெரிய அறைகளை இரண்டு அல்லது மூன்றாக பிரித்து பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்த முடியும். குடியிருப்பு, கடை, தொழில் நிறுவனங்கள் என, இடத்தின் தன்மைக்கேற்ப 'பார்ட்டிஷியன்' மாறுபடுகிறது.
அதற்கு தகுந்த உத்திகளை பயன்படுத்த வேண்டியது அவசியம். இதற்கென 'ஸ்டீல் ஆங்கிள்' வைத்து அவற்றை ஆங்காங்கே போல்ட், ஸ்க்ரூ, நட் வைத்து உறுதியாக இணைத்த பின்பு, இருபுறமும், 8 மி.மீ., பிளைவுட் வைத்து பிணைக்க செய்வதன் வாயிலாக, நாம் விரும்பும் அளவுகளில் எளிதில் பிரிக்கலாம்.
செலவும், வேலையும் சிக்கனமானது. சுலபமாக எடுத்து மற்ற இடங்களில் பயன்படுத்த முடியும். வீடுகளுக்கு என்றால் 'வுட் கார்விங் பேனல்' என பலதும் சந்தைகளில் வந்துள்ளது. எத்தகைய பார்ட்டிஷியன், எந்த நோக்கத்திற்காக அமைக்க விரும்புகிறோம், அது நிரந்தரமாக தேவையா, வீடு அல்லது வணிக பயன்பாட்டிற்கா என்பதை பொறுத்துதான், பார்ட்டிஷியன்களை தேர்வு செய்ய வேண்டும்.
தற்காலிக பார்ட்டிஷியன்கள் பெரும்பாலும் கடைகள், தொழில் கூடங்களுக்கு சிறந்தது; உறுதியானதும்கூட என்கிறார், 'கொசினா' உறுப்பினர் மாரிமுத்துராஜ்.