/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
செய்திகள்
/
அதிகரித்துவரும் கட்டுமான பொருள் விலை; மாற்றி யோசிக்கும் கட்டட உரிமையாளர்கள்
/
அதிகரித்துவரும் கட்டுமான பொருள் விலை; மாற்றி யோசிக்கும் கட்டட உரிமையாளர்கள்
அதிகரித்துவரும் கட்டுமான பொருள் விலை; மாற்றி யோசிக்கும் கட்டட உரிமையாளர்கள்
அதிகரித்துவரும் கட்டுமான பொருள் விலை; மாற்றி யோசிக்கும் கட்டட உரிமையாளர்கள்
ADDED : மே 02, 2025 09:21 PM

கட்டுமான பொருட்களின் விலை உயர்வு என்பது தொடர்கதையாக உள்ளது. இரும்பு, சிமென்ட், செங்கல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை அடிக்கடி உயர்ந்து கட்டுமான துறைக்கு சுமையை கூட்டிவருகிறது.
திடீர் விலையேற்றத்தால், பட்ஜெட்டில் கூடுதல் தொகை ஒதுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். வேறு வழியின்றி கடன் தொகையையும் அதிகரிக்க வேண்டியுள்ளது.
இச்சூழலில், விலை உயர்ந்த கட்டுமான பொருட்களுக்கு மாற்றாக, மற்றொரு பொருட்களையும் மக்கள் தேர்வு செய்ய துவங்கியுள்ளனர்.
அந்த வகையில், எம்.சாண்ட் பயன்பாடு மீது கவனம் திரும்பியுள்ளது. ஆற்று மணலுக்கு பதிலாக செயற்கை மணல் பயன்பாடு அதிகரித்துள்ளது.
இச்சூழலில், குவாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் உள்ளிட்ட காரணங்களால், சமீபத்தில் எம்.சாண்ட் போன்ற கட்டுமான பொருட்களின் விலையும் உயர்ந்தது.
எனவே, எம்.சாண்டுக்கு பதிலாக சுவர் மற்றும் சீலிங் பூச்சு வேலைகளுக்கு ரெடிமேட் பூச்சுக்கள் பயன்படுத்தலாமா என்பது, வீடு கட்டுவோரின் கேள்வியாக உள்ளது.
பூச்சு வேலைகளில் எம்.சாண்ட் உபயோகிப்பை குறைக்கும் வண்ணம், சில பொருட்களை பொறியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
அதன்படி, கட்டடத்தின் உட்புற சுவர்களுக்கு, ஜிப்சம் பிளாஸ்டர் மற்றும் கட்டட வெளிப்பூச்சு வேலைகளுக்கு 'பாலிமெரைசுடு பிரீ மிக்ஸ் பிளாஸ்டர்' பயன்படுத்துவதன் மூலம், எம்.சாண்ட் உபயோகத்தினை கணிசமாகக் குறைக்கலாம்; நேரமும் மிச்சமாகும்.
தனியாக பட்டி வேலை செய்ய வேண்டிய அவசியமும் இருக்காது. ஒரே நேரத்தில் பூச்சு மற்றும் பட்டி வேலை முடிந்துவிடும் என்கின்றனர் பொறியாளர்கள்.

