தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கனவு இல்லம்/செய்திகள்/ ஒரு கட்டடத்துக்கு அஸ்திவாரம் தாங்க எல்லாமே!

 ஒரு கட்டடத்துக்கு அஸ்திவாரம் தாங்க எல்லாமே!

 ஒரு கட்டடத்துக்கு அஸ்திவாரம் தாங்க எல்லாமே!


ADDED : பிப் 07, 2026 05:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2026 05:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ ஸ்திவாரம் என்பது எந்த ஒரு கட்டடத்திற்கும் மிகவும் அடிப்புறமான கட்டுமானமாகவும், அதுவே அக்கட்டமைப்பின் மொத்த பாரத்தையும் நிலத்துக்குள் கடத்த கூடியதாகவும் அமைகிறது.

ஆழமற்ற அஸ்திவாரம் என்பது விரிந்த அடித்தளம், பாய் அடித்தளம், பட்டா அடித்தளம், சுவர் அடித்தளம், 'ஸ்லாப் ஆன் கிரேட்' அடித்தளம் போன்ற முறைகளில் கட்டடத்தின் பாரத்தை மண்ணிற்குள் உள்ள தளத்தில் செலுத்துகிறது.

ஆழமான அஸ்திவாரத்தில் நிலத்துாண் அடிமானம், துாண் அடிமானம், கைசன் அடிமானம் போன்ற முறைகளின் வாயிலாக கட்டமைப்பின் பாரத்தை மிக ஆழமான, நிலைத்தன்மை கொண்ட மண்ணிற்குள்ளோ அல்லது பாறை அடுக்குகளுக்குள்ளோ செலுத்துகிறது.

அஸ்திவாரத்தின் செயல்பாடுகள் என்பது, கட்டடத்தின் பாரத்தை நிலத்தடிக்குள் கடத்தியும், பாரத்தை பரப்பியும், கட்டுமான பாரத்தை சமமான முறையில் பரப்புதல் மூலமாகவும் பாரம் நழுவுவதையும், அடித்தள சரிவையும் தடுக்கிறது.

கட்டுமானத்திற்கு நிலைத்தன்மை ஏற்படுத்துவதுடன் இடம்பெயர்தல் மற்றும் கவிழ்தலில் இருந்து காக்கப்படுகிறது. தண்ணீரானது கட்டடத்தின் உட்புகா வண்ணம் காத்து ஒரு தடுப்பு அரணாக விளங்குவது.

பல்வேறு மண் வகைகள் பல்வேறு தாங்கு திறன் மற்றும் தரை இறங்குதல் தன்மைகளையும் கொண்டிருக்கின்றன. அஸ்திவாரத்திற்கு அருகே அமையும் நிலத்தடி நீர்மட்டமானது, சில நேரங்களில் அஸ்திவார வடிவமைப்பையும், கட்டுமானத்தையும் பாதிக்க வல்லது.

காலநிலை, நில அதிர்வு மற்றும் மற்ற சுற்றுச்சூழல் காரணிகள் அஸ்திவார வடிவமைப்பை பாதிக்கக்கூடும். அஸ்திவாரம் சரியாக அமைக்கப்படவில்லையேல், தரையிறங்குதல் மற்றும் தரை நழுவுதல் ஏற்படுகிறது. அஸ்திவாரமானது இடப்பெயர்வு ஆவது மற்றும் சீரற்ற அடித்தள சரிவால் பாதிக்கப்படுவது போன்றவற்றுக்கு வாய்ப்புள்ளது.

சுவர்களிலும் தரைகளிலும் அஸ்திவாரத்திலும் வெடிப்புகள் ஏற்படக்கூடும்; இதனால், கட்டடத்திற்குள் நீர் உட்புகுகிறது. அஸ்திவார தோல்வியின் காரணமாக கட்டடத்தின் கட்டமைப்பே பாதிக்கக்கூடும்.

ஒரு நல்ல வடிவமைக்கப்பட்ட அஸ்வார கட்டுமானமானது, ஒரு கட்டடத்திற்கு முக்கியமானதும், பாதுகாப்பானதாகவும், நீடித்து உழைக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

- ஜெயபிரகாஷ்

'காட்சியா' செயற்குழு உறுப்பினர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us