தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கனவு இல்லம்/செய்திகள்/ குறைந்த பட்ஜெட்டில் வீடு கட்டுவதற்கான வழிமுறைகள் என்ன?

 குறைந்த பட்ஜெட்டில் வீடு கட்டுவதற்கான வழிமுறைகள் என்ன?

 குறைந்த பட்ஜெட்டில் வீடு கட்டுவதற்கான வழிமுறைகள் என்ன?


ADDED : மார் 07, 2026 08:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2026 08:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் அதற்கான பணிகளை துவக்கும் முன் பட்ஜெட் விஷயத்தை தெளிவாக முடிவு செய்ய வேண்டும். இதில், பெரும்பாலான மக்கள் தரமான வீடு குறைந்த பட்ஜெட்டில் கட்ட வேண்டும் என்று தான் நினைக்கின்றனர்.

வீடு கட்டுவதற்கான தரமான பொருட்கள் வாங்குவது என்றால் அதற்கு கூடுதலாக செலவாகும் என்று கூறப்படும் நிலையில் குறைந்த பட்ஜெட்டில் தரமான வீடு கட்டுவது சாத்தியமா என்ற கேள்வியும் எழுகிறது. இதில், குறைந்த பட்ஜெட்டில் ஒருவர் வீடு கட்டி கொடுக்க முன்வந்தால் அதில் தரம் குறைந்த பொருட்கள் பயன்படுத்தப்படலாம் என்று மக்கள் தாங்களாக நினைக்கின்றனர்.

தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி பிரபலமான பெரிய கட்டுமான நிறுவனங்களின் வீடு விலை அடிப்படையில் பார்த்தால் ஒரு சதுரடிக்கான கட்டுமான செலவு, 3,500 ரூபாய் அடிப்படை தொகையாக கூறப்படுகிறது. ஆனால், பிரபலம் ஆகதா உள்ளூர் அளவில் திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்கள், ஒரு சதுரடி, 2,400 ரூபாய் விலையில் வீடு கட்ட முன்வருகின்றன.

இதில் ஒரு சதுரடி, 2,400 ரூபாய் விலையில் வீடு கட்டும் போது அந்த தொகைக்குள் என்னென்ன வேலைகள் அடங்கும் என்பதை தெளிவாக விசாரிக்க வேண்டும். குறைந்த விலை என்பதால் தரமற்ற பொருட்கள் தான் பயன்படுத்தப்படும் என்று நீங்களாக முடிவுக்கு வருவது தவறு.

எதார்த்த நிலையில், கட்டுமான நிறுவனத்துடன் பேசினால், முந்தைய திட்டங்களில் அவர் என்ன வகை பொருட்களை எப்படி பயன்படுத்தினார் என்பது தெரியவரும். தற்போது அந்நிறுவனம் செயல்படுத்தி வரும் திட்ட பணிகளை நேரில் சென்று பார்த்தால் நீங்கள் ஒரு முடிவுக்கு வரலாம்.

கள நிலையில் நீங்கள் நேரில் சென்று பார்க்கும் போது தான் உண்மையில் தரமான பொருட்கள் குறைந்த விலையில் வாங்கி பயன்படுத்தப்படுவதை அறியலாம். சந்தையில் குறிப்பிட்ட சில நிறுவனங்களில் தரமான தயாரிப்பு பொருட்கள் குறைந்த விலைக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ஆனால், அந்த நிறுவனங்கள் பிரபலமானதாக இருக்காது என்பதை தவிர வேறு எந்த விஷயமும் இதற்கு காரணமாக கூற முடியாது. உதாரணமாக, சிமென்ட் விஷயத்தில் பிரபலமான சில நிறுவனங்கள், ஒரு மூட்டை, 380 ரூபாய்க்கு விற்கும் நிலையில், ஆந்திராவை சேர்ந்த சில நிறுவனங்கள், 320 ரூபாய் வழங்குகின்றன.

தரத்தில் எவ்வித சமரசமும் இன்றி, குறைந்த விலையில் தரமான பொருட்களை வாங்க முடியும் என்பதை புரிந்து கொண்டால் வீடு கட்டுவதில் ஏற்படும் பல்வேறு குழப்பங்களை தவிர்க்கலாம். புதிதாக வீடு கட்ட நினைப்பவர்கள் இதை சரியாக புரிந்து செயல்பட்டால் போதும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுநர்கள்.

கள நிலையில் நீங்கள் நேரில் சென்று பார்க்கும் போது தான் உண்மையில் தரமான பொருட்கள் குறைந்த விலையில் வாங்கி பயன் படுத்தப்படுவதை அறியலாம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us