தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கனவு இல்லம்/செய்திகள்/ பட்டாவில் பெயர் பிழைகளை சரி செய்வதற்கான வழிமுறைகள் என்ன?

 பட்டாவில் பெயர் பிழைகளை சரி செய்வதற்கான வழிமுறைகள் என்ன?

 பட்டாவில் பெயர் பிழைகளை சரி செய்வதற்கான வழிமுறைகள் என்ன?


ADDED : பிப் 28, 2026 06:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2026 06:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வீ டு, மனை வாங்குவோர் தங்கள் பெயருக்கு பத்திரப்பதிவு முறையாக நடந்து முடிந்தால் போதும் என்று தான் நினைக்கின்றனர். அதில், பத்திரத்தில் எந்த பிழையும் ஏற்படக்கூடாது என்பதிலும் பலர் அலட்சியமாக இருக்கின்றனர்.

சொத்து வாங்குவதற்கான கிரைய பத்திரத்தை தயாரிக்கும் பொறுப்பை ஆவண எழுத்தரிடம் கொடுத்துவிட்டால் போதும் என்று பலரும் நினைக்கின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான பத்திரங்களை கையாளும் ஆவண எழுத்தர்கள் அனைத்தையும் சரியாக செய்வார்கள் என்று மக்கள் தாங்களாகவே நினைத்து கொள்கின்றனர்.

உண்மையில் நீங்கள் வாங்கும் சொத்தின் தாய் பத்திரம் முதல், உங்கள் பெயருக்கு தயாரிக்கப்படும் கிரையப்பத்திரம் வரை அனைத்தையும் நீங்கள் முழுமையாக படித்து பார்க்க வேண்டும். சொத்து வாங்கும் போது அதற்கான பத்திரங்களை முழுமையாக படித்து பார்த்தால் மட்டுமே பிழைகள் இருப்பது தெரியவரும்.

இதே போன்று சொத்துக்கான பட்டாவில் பெயர் உள்ளிட்ட விபரங்களில் பிழைகள் எதுவும் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக, நீங்கள் வாங்கும் சொத்துக்கான பட்டா தற்போது யார் பெயரில் உள்ளது என்று பாருங்கள்.

அதில் உள்ள பெயர் உள்ளிட்ட விபரங்கள், பத்திரத்துடன் ஒத்துப்போகிறதா என்பதை சரி பார்க்க வேண்டியது அவசியம். இதேபோன்று உங்கள் பெயருக்கு மாற்றப்பட்ட பட்டாவில் பெயர், அளவு விபரங்கள் சரியாக உள்ளதா என்று பார்க்க வேண்டியதும் அவசியம்.

விற்பவர் பெயரில் உள்ள பட்டாவில் பெயர் தொடர்பான விபரங்களில் எழுத்துப்பிழை இருந்தால் அதை சரி செய்ய கேட்க வேண்டும். சொத்தை விற்பவர் இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துவது அவசியம்.

பொதுவாக பட்டாவில் காணப்படும் எழுத்துப்பிழைகளை சரி செய்வது அவ்வளவு எளிதான பணியல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பட்டாவில் உரிமையாளர் பெயர், அவரது கணவர் அல்லது தந்தை பெயர் போன்றவற்றில் பிழைகள் வர வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக பொது மக்கள் சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம். ஆனாலும், பிழைகளை சரி செய்வதில் வெளிப்படையான எளிய நடைமுறைகள் இன்னும் வரவில்லை என்பதால் மக்கள் அதில் பெரும்பாலும் அலைக்கழிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

எனவே, சொத்து வாங்கும் நிலையிலேயே பட்டாவில் பிழைகள் எதுவும் உள்ளதா என்பதை கவனித்தால் பல்வேறு பிரச்னைகளை தவிர்க்கலாம். இவ்விஷயத்தில் பிழைகளை சரி செய்வது எளிதான பணி அல்ல என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கின்றனர் ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர்கள்.



பொதுவாக பட்டாவில் காணப்படும் எழுத்துப்பிழைகளை சரி செய்வது அவ்வளவு எளிதான பணியல்ல என்பதை மக்கள் புரிந்து கொண்டு கவனமாக செயல்பட வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us